நடுவானில் மின்னல் தாக்கியதால் கொந்தளித்த விமானம்:- தூக்கி எறியப்பட்ட பயணிகள்! 

 ஒட்டாவா, ஜூலை .12-கனடாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் மீது மின்னல் தாக்கியதை அடுத்து அவசரமாக ஹவாயில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
ஏர் கனடா 33 ரக விமானம் 269 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்களுடன் நள்ளிரவு 12.33 மணிக்கு வான்கூவரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி புறப்பட்டு உள்ளது.

ஹொனாலுவிலிருந்து தென்மேற்கே 600 மைல் தொலைவில் 36,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த வேளை திடீரென மின்னல் தாக்கி உள்ளது.

இந்நிலையில்  அதில் நிலைகுலைந்த விமானம் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளது. பயணிகள் அனைவரும் இருக்கையில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். உடனே அங்கிருந்து வேகமாக திருப்பப்  விமானம் அமெரிக்கா ஹவாயில்  அதிகாலை 6 45 மணி அளவில் தரை இறக்கப்பட்டது.

இதில் 35 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.  குறைந்தபட்சம் 9 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் .பெரும்பாலான பயணிகளுக்கு தலை மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

The post நடுவானில் மின்னல் தாக்கியதால் கொந்தளித்த விமானம்:- தூக்கி எறியப்பட்ட பயணிகள்!  appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *