நட்சத்திரப் பலன்கள்- இந்த வருடத்தில் உங்களுக்கு எப்படி?

அஸ்வினிஏற்­றத்­தாழ்வு பார்க்­கா­மல் எல்­லோ­ரி­ட­மும் சம­மா­கப் பழ­கும் குணம் கொண்ட அஸ்வினி நட்­சத்­திர அன்­பர்­களே! இந்தப் புத்­தாண்­டில் கொடுத்த வாக்­கைக் காப்­பாற்றி, நன்­ம­திப்பு பெறு­வீர்­கள். பண­வ­ரவு திருப்­தி­க­ர­மாக இருக்­கும். மன­தில் ஏதே­னும் பதற்றம்  உண்­டா­க­லாம். உடற் சோர்­வு­கள் வர­லாம். முயற்­சி­க­ளில் சாத­க­மான பலன் கிடைக்­கும்.புதிய நபர்­க­ளின் அறி­மு­க­மும் அவர்­க­ளால் நன்­மை­யும் உண்­டா­கும். குரு­வின் சஞ்­சா­ரத்­தால் வீடு, வாக­னம் தொடர்­பான செலவு குறை­யும். வழக்கு விவ­கா­ரங்­க­ளில் கவ­னம் தேவை. தொழில் வியா­பா­ரம் தொடர்­பான பணி­க­ளில் இருந்த தடங்­கல்­கள் நீங்­கும். சாதூரிய­மான பேச்சு வியா­பார விருத்­திக்குக் கைகொ­டுக்­கும். அரச பணியில் இருப்­ப­வர்­கள் அலு­வ­ல­கப் பணி தொடர்­பாக அலைய நேரி­ட­லாம்.குடும்­பத்­தில் இருந்த சிறு­சிறு பிரச்­னை­கள் சரி­யா­கும்.   பிள்­ளை­க­ளின் தேவையைப் பூர்த்தி செய்ய முற்­ப­டு­ வீர்­கள். உற­வி­னர்­கள் வருகை இருக்­கும். பெண்­கள் எடுத்த காரி­யங்­களைச் சிறப்­பாகச் செய்து முடிப்­பார்கள். பண­வ­ரவு எதிர்­பார்த்­த­படி இருக்­கும். சாதூர்­ய­மான பேச்சு வெற்­றிக்கு உத­வும். அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு கட்சி மேலி­டத்­தின் ஆத­ரவு கூடு­த­லாக கிடைக்­கும்.மற்­ற­வர்­க­ளுக்கு முன் ஜாமீன் போடும் முன் யோசிக்­க­வும். கலைத்­து­றை­யி­னர் வெற்றி மேல் வெற்றி காண்­பீர்­கள். புதிய ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கும். மாண­வர்­கள் பாடங்­களை நன்கு படித்து மற்­ற­வர்­க­ளின் மதிப்­புக்கு ஆளா­வீர்­கள்.பரணிஅடுத்தவர்களை அனுசரித்துக் காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் பரணி நட்சத்திர அன்பர்களே! இந்தப் புத்தாண்டில் செலவு ஏற்படும். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். பணவரவு நன்றாக இருக்கும். அடுத்தவர்கள் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். குருபகவானின் சஞ்சாரம் வழக்குகளில் சாதகமான போக்கைத் தரும். நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.தொழில், வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.  உத்யோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம்.கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வதுகருத்து வேற்றுமை வராமல் தடுக்கும்.  பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது மனதுக்குத் திருப்தியைத் தரும்.   உறவினர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.மற்றவர்கள் பிரச்சினை தீர பாடுபடுவீர்கள். காரியத் தடை, தாமதம் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.கார்த்திகைஉங்­க­ளைச் சுற்றி இருக்­கும் மற்­ற­வர்­கள் பயன்­ப­டும் வித­மாகத் திற­மை­யைப் பயன்­ப­டுத்­தும் கார்த்­திகை நட்­சத்­திர அன்­பர்­களே!இந்தப் புத்­தாண்­டில் நீங்­கள் எடுக்­கும் முயற்­சி­கள் சாத­க­மாக நடந்து முடி­யும். வில­கிச் சென்­ற­வர்­கள் விரும்பி வந்து சேர்­வார்­கள். திடீர் மனத் தடு­மாற்­றம் உண்­டா­க­லாம். குரு­வின் சஞ்­சா­ரத்­தால் பண­வ­ரவு திருப்தி தரும். சின்­னச் சின்னப் பிரச்சினை­கள் தீரும். உடல் ஆரோக்­கி­யத்­தில் கவ­னம் தேவை.தொழில், வியா­பா­ரத்­தில் கடன் வந்து சேரும். வியா­பா­ரம் தொடர்­பான பய­ணங்­கள் செல்ல வேண்டி இருக்­கும். உத்­தி­யோ­கத்­தில் இருப்­ப­வர்­களின் கடு­மை­யான பணி­கள் கூட எளி­மை­யாக நடந்து முடி­யும்.குடும்­பத்­தில் இருப்­ப­வர்­க­ளின் நட­வ­டிக்கை  பதற்றத்தை ஏற்­ப­டுத்­த­லாம்.  கண­வன், மனை­விக்­கி­டையே கருத்து வேற்­றுமை உண்­டா­க­லாம். பிள்­ளை­க­ளின் நல­னில் அக்­கறை காட்­டு­வீர்­கள். உற­வி­னர்­கள் மத்­தி­யில் மதிப்புக் கூடும். பெண்­கள் எடுத்த காரி­யத்தைச் சாத­க­மாகச் செய்து முடிப்­பீர்­கள். திடீர் மனத் தடு­மாற்­றம் உண்­டா­க­லாம். பெரி­யோர்­கள் ஆலோ­சனை கை கொடுக்­கும். கலைத்­து­றை­யி­ன­ருக்கு அனைத்து வகை­யி­லும் நன்­மை­கள் கிடைக்­கும்.  மாண­வர்­க­ளுக்கு கல்வி பற்­றிய கவலை அதி­க­ரிக்­கும். கவ­ன­மா­கப்  பாடங்­களை படிப்­பது வெற்­றிக்கு உத­வும்.ரோகிணிசமூ­கத்­தில் எல்­லோ­ரா­லும் மதிக்­கப்­ப­டும் உயர்ந்த குண­மு­டைய ரோகிணி நட்­சத்­திர அன்­பர்­களே! இந்தப் புத்­தாண்­டில் எதை­யும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடு­ப­டும் மன­நிலை உண்­டா­கும். ஆன்­மிகப் பணி­க­ளில் நாட்­டம் அதி­க­ரிக்­கும். பண­வ­ரவு எதிர்­பார்த்­த­படி இருக்­கும். காரிய அனு­கூ­லங்­க­ளும் உண்­டா­கும். புதிய வாடிக்­கை­யா­ளர்­கள் கிடைப்­பார்­கள்.இலாபம் கூடும். உத்­யோ­கத்­தில் இருப்­ப­வர்­கள் அலு­வ­லக பணி­க­ளால் பதற்றம் அடை­வார்­கள். எதிர்­பார்த்­த­படி சக ஊழி­யர்­க­ளால் உத­வி­கள் கிடைக்­கும்.குடும்­பத்­தில் சின்னச் சண்­டை­க­ளும், பூசல்­க­ளும் இருக்­கும். கண­வன், மனை­விக்­கி­டையே வாக்­கு­வா­தங்­கள் உண்­டா­கும். உற­வி­னர்­க­ளு­டன் கருத்து வேற்­றுமை வர­லாம். பிள்­ளை­களை அவர்­கள் போக்­கில் விட்­டுப் பிடிப்­பது நல்­லது. பெண்­கள் எந்த ஒரு வேலை­யில் ஈடு­பட்­டா­லும் அது­பற்றி ஒரு­மு­றைக்கு பல­முறை யோசிப்பது நல்­லது. துணிச்­சல் அதி­க­ரிக்­கும். கலைத்­து­றை­யி­னர் அனைத்து வித­மான நிலை களி­லும் நன்­மை­க­ளைப் பெறு­வீர்­கள்.மாண­வர்­க­ளுக்குத் தன்­னம்­பிக்­கை­யு­டன் பாடங்­களை படித்து கூடு­தல் புள்ளிகள் பெற முயற்சி மேற்­கொள்­வீர்­கள்.திருவாதிரைஎத்­தனை தோல்வி ஏற்­பட்­டா­லும் வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்­னே­றும் குண­மு­டைய திரு­வா­திரை நட்­சத்­திர அன்­பர்­களே! இந்தப் புத்­தாண்­டில் நட்­சத்திரா­தி­பதி ராகு­ வின் சஞ்­சா­ரத்­தால் மனக்­க­வலை நீங்கி எதி­லும் தெளி­வான முடிவு எடுப்­பீர்­கள். பண­வ­ரவு கூடும். காரி­யத் தடை­கள் அகன்று எதி­லும் திருப்­தி­யான போக்குக் காணப்­ப­டும்.மனம் மகி­ழும் சம்­ப­வங்­கள் நடக்­க­லாம். வெளி­யூர் பய­ணங்­கள் மன­துக்கு மகிழ்வைத் தரு­வ­தாக இருக்­கும். சனி பக­வா­னின் சஞ்­சா­ரத்­தால் உடல் ஆரோக்­கி­யம் பாதிக்­கப்­ப­ட­லாம். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. உங்­க­ளது சிறப்­பான செயல்­கள் மற்­ற­வர்­க­ளின் பாராட்டைப் பெற்­றுத் தரும். தொழில், வியா­பா­ரத்­தில் ஈடு­பட்டு இருப்­ப­வர்­கள் சாதூரியமான பேச்­சின் மூலம் முன்­னேற்­றம் காண்­பார்­கள்.எதிர்­பார்த்­த­படி நிதி­நிலை உய­ரும். உத்­தி­யோ­கத்­தில் இருப்­ப­வர்­கள் கூடு­த­லான பணி­களைக் கவ­னிக்க வேண்டி இருக்­கும்.பொறுப்­பு­கள் அதி­க­ரிக்­கும்.கண­வன் மனை­விக்­கி­டையே கோபத்தை விட்­டு­விட்டு இத­மாகப் பேசு­வ­தன் மூலம் நன்மை உண்­டா­கும். பிள்­ளை­கள் மூலம் பெருமை கிடைக்­கும். பெண்­கள் எடுத்த காரி­யங்­களைச் செய்து முடிப்­ப­தில் காரிய தாம­தம் உண்­டா­கும். பணப்­பு­ழக்­கம் அதி­க­ரிக்­கும். கலைத்­து­றை­யி­ன­ருக்கு வாய்ப்­பு­கள் சீரான நிலை­யில் இருக்­கும். உங்­க­ளுக்கு பின்­னால் உங்­களைப் பற்றிப் புறம் பேசி­ய­வர்­கள் உங்­க­ளி­டம் சரண் அடை­வார்­கள். மாண­வர்­க­ளுக்கு உயர்­கல்வி கற்கத் தேவை­யான பண­வ­சதி கிடைக்­கும். கூடு­த­லாக கவ­னம் செலுத்­திப் படிப்­பது வெற்­றிக்கு உத­வும்.புனர்பூசம்எப்­போ­தும் நிதா­ன­மா­கக் காணப்­ப­டும் புனர்­பூச நட்­சத்­திர அன்­பர்­களே! இந்த புத்­தாண்­டில் நட்­சத்திரா­தி­பதி குரு­வின் பாத­சார சஞ்­சா­ரத்­தால் எதிர்ப்­பு­கள் வில­கும். பண­வ­ரவு அதி­க­ரிக்­கும். நண்­பர்­கள் மூலம் எதிர்­பார்த்த உத­வி­கள் கிடைக்­கும். விரும்­பிய பொருட்­களை வாங்கி மகிழ்­வீர்­கள். குடும்­பத்­தில் இத­மான சூழ்­நிலை காணப்­ப­டும். கண­வன், மனை­விக்­கி­டையே சின்­னச் சின்னக் கருத்து வேற்­று­மை­கள் வரும்.பிள்­ளை­க­ளின் செயல்­பா­டு­கள் ஆறு­த­லைத் தரும். வீட்டுக்குத் தேவை­யான பொருள்களை வாங்­கு­வீர்­கள். பெண்­க­ளுக்கு அடுத்­த­வர்­க­ளின் செயல்­க­ளால் கோபம் உண்­டா­க­லாம்.கொடுத்த கடனை திரும்­பப் பெறு­வ­தில் முழு­மூச்­சு­டன் செயற்படு­வீர்­கள். கலைத்­து­றை­யி­னர் முதலீடு போன்­ற­வற்­றில் மிக­வும் கவ­ன­மாக இருப்­பது நல்­லது. மாண­வர்­கள் கவ­னத்தைச் சிதற விடா­மல் வகுப்பைக் கவ­னிப்­பது அவ­சி­யம். கூடு­த­லாகப் பாடங்­களை படிக்க வேண்டி இருக்­கும்.மிருகசீரிடம்மன­தில் இருக்­கும் கவ­லை­களை வெளிக்­காட்­டா­மல் சிரித்த முகத்­து­டன் அனை­வ­ரி­ட­மும் பழ­கும் குண­மு­டைய மிரு­க­சீரிட நட்­சத்­திர அன்­பர்­களே! இந்தப் புத்­தாண்­டில் காரி­யத் தடங்­கல்­கள் உண்­டாகி நீங்­கும். ஆன்­மிக நாட்­டம் அதி­க­ரிக்­கும். பய­ணங்­கள் சாத­க­மான பலன்­கள் தரும்.மனக்­க­வலை நீங்கி தெளிவு உண்­டா­கும். எதிர்­பா­ராத திருப்­பங்­க­ளால் சில­ரது வாழ்க்­கைத் தரம் உய­ரும். நட்­சத்திரா­தி­பதி செவ்­வா­யின் சஞ்­சா­ரத்­தால் நீண்ட நாள்களாக இழு­ப­றி­யாக இருந்த காரி­யம் நன்கு முடி­யும். புதிய நண்­பர்­கள் கிடைப்­பார்­கள்.குடும்­பத்­தில் இருப்­ப­வர்­க­ளால் நன்மை உண்­டா­கும். கண­வன், மனை­விக்­கி­டையே மகிழ்வான நிலை காணப்­ப­டும். பிள்­ளை­க­ ளின் முன்­னேற்­றத்­தில் அக்­கறை காட்­டு­வீர்­கள். உற­வி­னர்­கள் மூலம் அனு­கூ­லம் உண்­டா­கும்.பெண்­க­ளுக்கு மனக்­கு­ழப்­பம் நீங்கி தெளி­வான சிந்­தனை உண்­டா­கும். இழு­ப­றி­யாக இருந்த காரி­யங்­கள் சாத­க­மாக முடி­யும். கலை­ஞர்­கள் தங்­கு­த­டை­யின்றி புதிய வாய்ப்­பு­க­ளைப் பெற­லாம். மாண­வர்­கள் தேர்­வில் கூடு­தல் புள்ளிகள் பெற நன்கு படிக்க வேண்டும்.ஆயிலியம்மற்­ற­வர்­க­ளின் நல­னுக்­காகத் தன் நலனை பாரா­மல் உழைக்­கும் ஆயிலிய நட்­சத்­திர அன்­பர்­களே! இந்தப் புத்­தாண்­டில் எதிர்­பார்த்­த­படி காரி­யங்­கள் நடந்து முடி­யும். உடல் ஆரோக்­கி­யம் மேம்­ப­டும். வாக்கு வாதத்­தால் இருந்த பகை நீங்­கும். பய­ணத்­தில் தடங்­கல், வீண் செலவு அக­லும். பண வரவு இருக்­கும். நன்­மை­கள் உண்­டா­கும். வாகன யோகம் உண்­டா­கும். பெரி­யோர்­க­ளின் உதவி கிடைக்­கும். மன­தில் தைரி­யம் உண்­டா­கும். எதி­லும் தயக்­கமோ, பயமோ ஏற்­ப­டாது.தொழில், வியா­பா­ரம் நன்­றாக நடக்­கும். வாக்கு வன்­மை­யால் இலாபம் அதி­க­ரிக்­கும். அர­சு தொடர்­பான காரி­யங்­கள் சாத­க­மான பலன் தரும். உத்­தி­யோ­கத்­தில் இருப்ப வர்­க­ளுக்கு புதிய பத­வி­கள் கூடு­தல் பொறுப்புக் கிடைக்­கப்­பெ­று­வார்­கள். அலு­வ­லகப் பணி­களை வெற்­றி­க­ர­மாகச் செய்து முடிக்­கும் சாமர்த்­தி­யம் உண்­டா­கும்.குடும்­பத்­தில் மகிழ்ச்சி இருக்­கும். நீண்ட நாள்க­ளாக இருந்த குடும்­பப் பிரச்சினை­கள் சாத­க­மாக முடி­யும். கண­வன், மனை­விக்­கி­டையே இருந்த கருத்து வேற்­றுமை நீங்­கும். குழந்­தை­கள் கல்­விக்­காக பாடு­பட வேண்டி இருக்­கும். பெண்­க­ளுக்கு பய ணங்­க­ளால் செலவு ஏற்­ப­டும். துணிச்­ச­லு­டன் எதி­லும் ஈடு­பட்டு காரிய வெற்றி காண்­பீர்­கள். கலைத்­து­றை­யி­ன­ருக்கு முயற்­சி­க­ளின் பேரில் புதிய ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கும். மாண­வர்­க­ளுக்கு கல்­வி­யில் முன்­னேற்­றம் உண்­டா­கும்.பூசம்எங்­கும் நல்­லது நடக்க வேண்­டும் என்ற குறிக்­கோளை உடைய பூச நட்­சத்­திர அன்­பர்­களே! நீங்­கள் நன்­மைக்­காகப் போரா­டத் தயங்­கா­த­வர். இந்த புத்­தாண்­டில் மனக்­க­லக்­கம் உண்­டா­கும். எவ்­வ­ளவு திற­மை­யாக செயல்­பட்­டா­லும் மற்­ற­வர்­க­ளின் விமர்­ச­னத்துக்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்துச் செயல்­பட்­ட­வர்­கள் அடங்கி விடு­வார்­கள்.பண­வ­ரவு எதிர்­பார்த்த படி இருக்­கும். எதிர்­பா­லி­னத்­தா­ரின் நட்­பும், அத­னால் மகிழ்ச்­சி­யும் உண்­டா­கும். விருந்து நிகழ்ச்­சி­யில் கலந்து கொள்ள நேரி­ட­லாம். வீண்­செ­லவு, உடல்­நல பாதிப்பு ஏற்­ப­ட­லாம். கவ­னம் தேவை. தொழில், வியா­பா­ரத்­தில் எதிர்­பார்த்த முன்­னேற்­றம் காண்பதாயின் கூடு­த­லாக உழைக்க வேண்டி இருக்­கும். வாடிக்­கை­யா­ளர்­க­ளின் ஆத­ரவு நீடிக்­கும். தொழில் விரி­வாக்­கம் பற்­றிய எண்­ணம் உண்­டா­கும். உத்தியோ­கத்­தில் இருப்­ப­வர்­கள் புதிய பதவி அல்­லது கூடு­தல் பொறுப்­பு­கள் கிடைக்­கப் பெறு­வார்­கள்.குடும்­பத்­தில் இருப்­ப­வர்­க­ளின் நல­னுக்­காக செலவு செய்ய வேண்டி இருக்­கும். கண­வன், மனை­விக்­கி­டையே அன்பு அதி­க­ரிக்­கும். பிள்­ளை­க­ளின் தேவையைப் பூர்த்தி செய்­வ­தில் ஆர்­வம் காட்­டு­வீர்­கள். அவர்­கள் உங்­களை மதிப்­பது மன­துக்கு இத­ம­ளிக்­கும். பெண்­க­ளுக்கு மன­தில் வீண்­கு­ழப்­பம் உண்­டா­கும். கலைத்­து­றை­யி­ன­ருக்கு கௌர­வம் உய­ரும். விரும்­பிய பதவி கிடைக்­கும். மாண­வர்­க­ளுக்குக் கல்­வி­யில் வெற்றி பெற எடுக்­கும் முயற்­சி­கள் நல்ல பலன் தரும். சக மாண­வர் களின் நட்­பும் கிடைக்­கும்.விசாகம்தன்­னம்­பிக்­கை­யும், விடா­மு­யற்­சி­யும் உடைய விசாக நட்­சத்­திர அன்­பர்­களே, இந்தப் புத்­தாண்­டில் பணத்­தேவை அதி­க­ரிக்­கும். வீண்­செ­லவு. மன­அ­மைதி பாதித்­தல் ஆகி­யவை இருக்­கும். எனி­னும் விருந்து நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்டு வாய்க்கு ருசி­யாக உணவு உண்­பீர்­கள். காரிய தாம­தம், உடல் சோர்வு, வீண்­பகை போன்­றவை ஏற்­ப­ட­லாம். உங்­க­ளைக் கண்டு அடுத்­த­வர் பொறாமைப் படக்­கூ­டும். தொழில், வியா­பா­ரம் தொடர்­பான காரி­யங்­க­ளுக்­காக அலைய வேண்டி இருக்­கும். வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் அனு­ச­ரித்­துப் பேசு­வது நல்­லது. உத்­தி­யோ­கத்­தில் இருப்­ப­வர்­கள் மேல் அதி­கா­ரி­களை அனு­ச­ரித்­துச் செல்­வ­தன் மூலம் நன்மை கிடைக்­கப் பெறு­வார்­கள்.பெண்­க­ளுக்கு மன அமைதி பாதிக்­கும் படி­யான சூழ்­நிலை இருக்­கும். திடீர்ச் செலவு உண்­டா­கும். கலைத்­து­றை­யி­ன­ருக்கு திற­மைக்­கேற்ற வாய்ப்­பு­கள் கிடைக்­கும். சூரி­ய­னின் சஞ்­சா­ரத்­தால் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு பெயர், புகழ், மதிப்பு யாவும் தேடி வரும். உங்­கள் பேச்சுக்கு மதிப்­பும், மரி­யா­தை­யும் உய­ரும். மாண­வர்­கள் பாடங்­களை மிக­வும் கவ­ன­மா­கப் படிப்­பது கூடு­தல் மதிப்­பெண் பெற உத­வும்.மகம்தன்னைத் தானே உயர்த்திக் கொள்வதுடன் பிறரும் உயரப் பாடுபடும் மக நட்சத்திர அன்பர்களே! இந்தப் புத்தாண்டில் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிற்றுக் கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் பலன் தரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது.குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூரியமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும்.பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.பூரம்இரக­சி­யங்­களை மற்­ற­வர்­க­ளு­டன் பகிர்ந்து கொள்­வ­தால் பல காரி­யத் தடை­களைச் சந்­திக்­கும் பூர நட்­சத்­திர அன்­பர்­களே, இந்த புத்­தாண்­டில் வீண் வாக்­கு­வா­தங்­கள், அதன்­மூ­லம் பிற­ரி­டத்­தில் பகை போன்­றவை உண்­டா­க­லாம். மனோ­தை­ரி­யம் அதி­க­ரிக்­கும். செல­வுக்கு ஏற்ற வர­வும் இருக்­கும். தன்­னம்­பிக்கை அதி­க­ரிக்­கும். உங்­க­ளது பொருள்களை கவ­ன­மா­கப் பார்த்­துக் கொள்­வது நல்­லது. வாக­னங்­க­ளால் செலவு ஏற்­ப­டும்.தந்­தை­யு­டன் கருத்து வேற்­றுமை வர­லாம். சொத்­துக்­களை அடை­வ­தில் தாம­தம் ஏற்­ப­டும். தொழில், வியா­பா­ரத்­தில் லாபம் கிடைப்­பது குறை­ய­லாம். தொழில், வியா­பா­ரம் விரி­வாக்­கம் செய்­வது தொடர்­பாக முக்­கிய முடிவு எடுப்­பீர்­கள். உத்­யோ­கத்­தில் இருப்­ப­வர்­கள் அலு­வ­ல­கம் தொடர்­பான பய­ணம் செல்ல வேண்டி வர­லாம். சக ஊழி­யர்­க­ளின் உத­வி­யும் கிடைக்­கும்.குடும்­பத்­தில் சுப காரி­யம் நடக்­கும். கண­வன் –மனை­விக்­கி­டையே நெருக்­கம் அதி­க­ரிக்­கும். பிள்­ளை­க­ளின் செயல்­பா­டு­க­ளில் கவ­னம் தேவை. உற­வி­னர்­கள் மூலம் நன்மை உண்­டா­கும். வீட்­டிற்­குத் தேவை­யான பொருட்­கள் சேரும். பெண்­கள் நம்­பிக்­கை­யு­டன் காரி­யங்­க­ளில் ஈடு­பட்டு வெற்றி காண்­பீர்­கள். மற்­ற­வர்­களை நம்பி பொறுப்­பு­களை ஒப்­ப­டைப்­ப­தில் கவ­னம் தேவை. கலைத்­து­றை­யி­ன­ருக்கு வாய்ப்­பு­கள் வந்து குவி­யும். மாண­வர்­க­ளுக்கு கல்வி தொடர்­பான பய­ணங்­கள் செல்ல வேண்டி இருக்­கும்.அஸ்தம்எல்லோரையும் அனு­ச­ரித்­துப் பேசும் குண­மு­டைய அஸ்த நட்­சத்­திர அன்­பர்­களே, இந்த புத்­தாண்­டில் பேச்­சின் இனிமை சாதூரியத்­தின் மூலம் காரிய வெற்றி காண்­பீர்­கள். பண­வ­ரவு கூடும். சாமர்த்­தி­ய­மான செயல்­க­ளால் மதிப்­பு உய­ரும். மனக்­க­வலை நீங்­கும்­ப­டி­யான சூழ்­நிலை இருக்­கும். உற்­சா­கம் உண்­டா­கும். பய­ணத்­தின் போது ஏற்­பட்ட தடங்­கல் நீங்­கும். தொழில், வியா­பா­ரம் லாப­க­ர­மாக நடக்­கும். போட்­டி­கள் வில­கும். தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­பட்டு முன்­னேற்­றம் காண்­பீர்­கள். உத்­தி­யோ­கத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்கு பணி­களை விரைந்து முடிக்க தேவை­யான உத­வி­கள் கிடைக்­கும். புதிய வேலை தொடர்­பாக மேற்­கொள்­ளும் முயற்­சி­க­ளில் சாத­க­மான பலன் கிடைக்­கும்.குடும்­பத்­தில் இருப்­ப­வர்­கள் உங்­களை அனு­ச­ரித்­துச் செல்­வார்­கள். கண­வன், மனை­விக்­கி­டையே இருந்த பிரச்­னை­கள் தீரும். பிள்­ளை­கள் மூலம் பெருமை உண்­டா­கும். பெண்­க­ளுக்கு எதிர்­பா­ராத பண­வ­ரவு இருக்­கும். மனக்­க­வலை நீங்கி உற்­சா­கம் உண்­டா­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.கலைத்­து­றை­யி­ன­ருக்கு புதிய ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கும். மாண­வர்­க­ளுக்கு கல்வி யில் வெற்றி பெறு­வோம் என்ற தன்­னம்­பிக்கை அதி­க­ரிக்­கும்.உத்திரம்புத்தி சாதூரியத்­து­டன் காரி­யங்­களைச் செய்து மற்­ற­வர்­க­ளின் பாராட்­டைப் பெறும் உத்­திர நட்­சத்­திர அன்­பர்­களே, இந்தப் புத்­தாண்­டில் எதிர்­பார்த்த பணம் வர­லாம். எதிர்ப்­பு­கள் வில­கும். ஆரோக்­கி­யக் குறை­பாடு ஏற்­ப­டும். எந்­தக் காரி­யம் செய்­தா­லும் தாம­தம் உண்­டா­கும். எல்­லா­வற்­றி­லும் ஒரு பயம் ஏற்­ப­டும். புதி­ய­ந­பர்­க­ளின் நட்பு உண்­டா­கும். வீடு வாக­னம் தொடர்பில் கூடு­தல் கவ­னம் தேவை. தொழில், வியா­பா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­கள் எவ்­வ­ளவு திற­மை­யாகச் செயல்­பட்­டா­லும் மெத்­த­ன­மான போக்கு காணப்­ப­டும். வியா­பா­ரம் தொடர்­பான பய­ணங்­களை திட்­ட­மிட்­ட­படி மேற்­கொள்ள முடி­யாத நிலை உண்­டா­கும். உத்தி யோ­கத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்கு அலு­வ­லக வேலை­க­ளால் பதற்றம் உண்­டா­க­லாம். சக ஊழி­யர்­க­ளின் ஒத்­து­ழைப்பு இருக்­கும்.குடும்­பத்­தில் இருப்­ப­வர்­க­ளால் நிம்­ம­திக் குறைவு உண்­டா­க­லாம். கண­வன், மனை­விக்­கி­டையே மனம் விட்­டுப் பேசு­வ­தன் மூலம் முக்­கி­ய­மான காரி­யங்­க­ளில் நல்ல முடிவு எடுக்க முடி­யும். பிள்­ளை­க­ளின் நல­னுக்­காகப் பாடு­பட வேண்டி இருக்­கும். பெண்­கள் வாக்­கு­வா­தங்­கள் அடுத்­த­வர் பற்­றிய விமர்­ச­னங்­களைத் தவிர்ப்­பது நல்­லது. கலைத்­து­றை­யி­னர் வாக­னங்­க­ளில் செல்­லும் போது கவ­னம் தேவை. மாண­வர்­க­ளுக்கு கல்வி பற்­றிய கவலை அதி­க­ரிக்­கும்.சித்திரைநேரத்துக்கு ஏற்­றாற்­போல் குணத்தை மாற்­றிக்­கொண்டு சாமர்த்­தி­ய­மாகச் செயல்­ப­டும் சித்­திரை நட்­சத்­திர அன்­பர்­களே, இந்தப் புத்­தாண்­டில் எதி­லும் கவ­ன­மாக இருப்­பது நல்­லது. ஏதே­னும் மனக்­கஷ்­டம் உண்­டா­கும். வீண்­செ­லவு ஏற்­ப­டும்.உடல்­சோர்வு வர­லாம். மனோ தைரி­யம் கூடும். தன்­னம்­பிக்கை அதி­க­ரிக்­கும். முயற்­சி­கள் சாத­க­மான பலன் தரும். தொழில், வியா­பா­ரத்­தில் முன்­னேற்­ற­ம­டைய பாடு­ப­டு­வீர்­கள். உத்­தி­யோ­கத்­தில் இருப்­ப­வர்­கள் பணி நிமித்­த­மாக அலைய வேண்டி இருக்­கும்.குடும்­பத்­தில் நிம்­மதி குறை­யும் படி­யான சூழ்­நிலை வர­லாம். கண­வன், மனை­விக்­கி­டையே வாக்கு வாதங்­களைத் தவிர்த்து விட்­டுக்­கொ­டுத்­துச் செல்­வது நல்­லது. பிள்­ளை­க­ ளி­டம் அன்­பாக நடந்து கொள்­வது அவர்­க­ளின் வெற்­றிக்கு உத­வும். பெண்­க­ளுக்கு மனோ­தை­ரி­யம் கூடி­னா­லும் பழைய சம்­ப­வங்­க­ளின் நினை­வால் மன­ம­கிழ்ச்சி குறை­யும். கலைத்­து­றை­யி­ன­ருக்கு வீண் பய­ணம் ஏற்­ப­ட­லாம். மாண­வர்­க­ளுக்கு பாடங்­களை படிப்­ப­தில் அக்­கறை தேவை. திட்­ட­மிட்­ட­படி செயல்­பட முடி­யா­த­படி தடங்­கல்­கள் ஏற்­ப­ட­லாம்.சுவாதிஉயர்வு, தாழ்வு என்று எதைப் பற்­றி­யும் கவ­லைப்­ப­டா­மல் எடுத்த காரி­யத்தை முடிப்­பதே குறிக்­கோ­ளாக உடைய சுவாதி நட்­சத்­திர அன்­பர்­களே, இந்தப் புத்­தாண்­டில் பண­வ­ரவு இருக்­கும். மனக்­க­வலை நீங்­கும். எடுத்த காரி­யத்தைத் திருப்­தி­யு­டன் செய்து முடிப்­பீர்­கள். சாமர்த்­தி­ய­மான பேச்சு இக்­கட்­டான நேரங்­க­ளில் கைகொ­டுக்­கும்.எதி­லும் கவ­னம் தேவை. புதிய நண்­பர்­க­ளின் சேர்க்­கை­யும் அவர்­க­ளால் உத­வி­யும் கிடைக்­கும். தொழில், வியா­பா­ரம் தொடர்­பான பணி­கள் தடை­யின்றி நடக்­கும். புதிய ஆர்­டர் தொடர்­பான காரி­யங்­கள் சாத­க­மான பலன் தரும். வியா­பாரப் போட்­டி­கள் குறை­யும். உத்­யோ­கத்­தில் இருப்­ப­வர்­கள் பணிச்­சுமை குறைந்து மன­நிம்­மதி அடை­வார்­கள். குடும்­பத்­தில் குடும்ப உறுப்­பி­னர்­க­ளி­டம் வாக்­கு­வா­தத்தை தவிர்ப்­பது நன்மை தரும்.கண­வன், மனை­விக்­கி­டையே ஒற்­றுமை உண்­டா­கும். பிள்­ளை­கள் வழி­யில் நிம்­மதி கிடைக்­கும். பெண்­க­ளுக்குக் காரி­யங்­க­ளில் ஏற்­பட்ட தடை­நீங்கி திருப்­தி­யாக நடந்து முடி­யும். பண­வ­ரவு திருப்தி தரும். கலைத்­து­றை­யி­ன­ருக்கு தொழி­லில் இருந்த பிரச்­னை­கள் அக­லும். மாண­வர்­க­ளுக்கு கல்வி தொடர்­பான விடயங்­க­ளில் இருந்த போட்­டி­கள் குறை­யும். எதிர்­கா­லம் பற்­றிய சிந்­தனை மேலோங்­கும்.அனுசம்தர்­ம­கு­ண­மும், இரக்க சிந்­த­னை­யும் உடைய அனுஷ நட்­சத்­திர அன்­பர்­களே! இந்தப் புத்­தாண்­டில் எல்­லா­வற்­றி­லும் லாபம் கிடைக்­கும். நோய் நீங்கி உடல் ஆரோக்­கி­யம் உண்­டா­கும். மற்­ற­வர்­க­ளுக்கு உத­வி­கள் செய்­வ­தன் மூலம் நன்­ம­திப்பு பெறு­வீர்­கள். உங்­க­ளு­டன் கருத்து வேற்­றுமை ஏற்­பட்டுப் பிரிந்து சென்­ற­வர்­கள்மீண்­டும் உங்­களை நாடி வரு­வார்­கள். தொழில், வியா­பா­ரம் தொடர்­பான காரி­யங்­க­ளில் சாத­க­மான பலன் கிடைக்­கும். எதிர்­பார்த்த லாபம் வரும். கண­வன், மனை­விக்­கி­டையே சுமுக உறவு இருக்­கும். பிள்­ளை­க­ளுக்கு தேவை­யான ஆடை அணி­க­லன்­கள் வாங்கி கொடுப்­பீர்­கள்.பெண்­க­ளுக்குக் கருத்து வேற்­று­மை­யால் பிரிந்து சென்­ற­வர்­கள் மனம் மாறி மீண்­டும் திரும்பி வரு­வார்­கள். பண­வ­ரத்து திருப்தி தரும். காரிய அனு­கூ­லம் உண்­டா­கும். கலைத்­து­றை­யி­ன­ருக்கு பணி­யாள்க­ளின் ஒத்­து­ழைப்புக் கிடைக்­கும். புகழ் கிடைக்­கும். சக கலை­ஞர்­கள் மூலம் சில தொந்­த­ர­வு­கள் நேரி­ட­லாம். மாண­வர்­க­ளுக்குக் கல்வி தொடர்­பான செலவு கூடும். கல்­வி­யில் முன்­னேற வேண்­டும் என்­பதைக் குறிக்­கோ­ளாக கொண்டு பாடங்­களை படிப்­பீர்­கள்.மூலம்சோர்­வில்­லா­மல் எப்­போ­தும் உற்­சா­க­மாகக் காணப்­ப­டும் மூல நட்­சத்­திர அன்­பர்­களே! இந்த புத்­தாண்­டில் உல்­லா­சப் பய­ணங்­கள் செல்ல நேர­லாம். நற்­பெ­ய­ரும் புக­ழும் உண்­டா­கும். புண்­ணிய காரி­யங்­க­ளில் ஈடு­பாடு இருக்­கும். வாழ்க்­கை­யில் எதிர்­பா­ராத திருப்­பங்­களை சந்­திக்க நேர­லாம். எப்­ப­டிப்­பட்ட பிரச்னை வந்­தா­லும் சமா­ளித்­து­வி­டும் திறமை இருக்­கும்.தொழில், வியா­பா­ரத்­தில் ஈடு­பட்டு இருப்­ப­வர்­கள் வியா­பார வளர்ச்­சிக்­காக துணிச்­ச­லு­டன் சில முடி­வு­கள் எடுப்­பீர்­கள். உத்­தி­யோ­கத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்கு முன்­னேற வாய்ப்­பு­கள் வந்து சேரும். சக ஊழி­யர்­கள் மேல் அதி­கா­ரி­க­ளின் ஆத­ர­வு­டன் பணி­களைத் திற­மை­யாக செய்து முடிப்­பீர்­கள். குடும்­பத்­தில் கண­வன், மனை­விக்­கி­டையே நெருக்­கம் அதி­க­ரிக்­கும்.பிள்­ளை­க­ளின் செயல்­பா­டு­கள் திருப்­தி­க­ர­மாக இருக்­கும். மன­வ­ருத்­தத்­து­டன் சென்ற உற­வி­னர்­கள் கலைத்­து­றை­யி­னர் உற்­சா­க­மாக செயல்­பட்டு வேலை­களை உட­னுக்­கு­டன் செய்து முடிப்­பீர்­கள். மாண­வர்­க­ளுக்குக் கல்­வி­யில் முன்­னேற்­றம் காணப்­ப­டும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் வெற்றி வாய்ப்பு உண்­டா­கும்.உத்திராடம்திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் கொண்ட உத்திராட நட்சத்திர அன்பர்களே, இந்தg; புத்தாண்டில் பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். இனிமையான பேச்சின் சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்வீர்கள்.குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப் படும். கணவன், மனைவி அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களைக் கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்து கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்அவிட்டம்பிரச்சினை என்று வரும் போது அதில் சிக்காமல் சாமர்த்தியமாக நழுவும் திறமை உடைய அவிட்ட நட்சத்திர அன்பர்களே! இந்த புத்தாண்டில் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தைத் தரலாம். கவனம் தேவை.குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். பெண்களது கருத்துக்கு சிலர் மாற்றுக் கருத்துக் கூறலாம்.எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியைத் தரும்.பூரட்டாதிசந்தர்ப்பத்துக்குத் தகுந்­தாற்­போல் கருத்­துக்­களை மாற்­றிக்­கொள்­ளும் பூரட்­டாதி நட்­சத்­திர அன்­பர்­களே, இந்த புத்­தாண்­டில் உங்­க­ளுக்கு துன்­பம் வரு­வது போல் இருக்­குமே தவிர, ஆனால் வராது. மன­தில் ஏதே­னும் கவலை, பயம் அவ்­வப்­போது ஏற்­ப­டும். உங்­க­ளது பேச்சே உங்­க­ளுக்கு எதிர்ப்பை உண்­டாக்­க­லாம். யோசித்­துப் பேசு­வது நல்­லது. ஆன்­மிக எண்­ணம் அதி­க­ரிக்­கும். தொழில், வியா­பா­ரம் மூலம் வர வேண்­டிய லாபம் தாம­தப்­ப­டும். எதிர்­பார்த்த நிதி­யு­தவி ஓர­ளவு கிடைக்­கும். உத்தியோ­கத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்கு விருப்­பம் இல்­லாத மாற்­றம் வர­லாம்.குடும்­பத்­தில் வீண் வாக்­கு­வா­தங்­கள் ஏற்­ப­டும். கண­வன், மனை­விக்­கி­டையே நிதா­னத்­தைக் கடைப்­பி­டிப்­பது நல்­லது. பிள்­ளை­க­ளின் உடல் ஆரோக்­கி­யத்­தில் கவ­னம் தேவை. உற­வி­னர்­கள், நண்­பர்­க­ளி­டம் கவ­ன­மா­கப் பழ­கு­வது நல்­லது. பெண்­கள் எந்த ஒரு காரி­யத்­தை­யும் செய்து முடிக்­கும் வரை அந்த காரி­யம் முடி­யுமோ, முடி­யாதோ என்ற மனக் கவலை இருக்­கும். வீண் அலைச்­சல் குறை­யும். கலைத்­து­றை­யி­ன­ருக்கு அடுத்­த­வரை பார்த்து எதை­யும் செய்ய தோன்­ற­லாம்.மாண­வர்­க­ளுக்கு கல்­வி­யில் வெற்றி பெறு­வது பற்­றிய மனக்­க­வலை இருக்­கும். சக­மா­ண­வர்­க­ளு­டன் வாக்கு வாதங்­க­ளைத் தவிர்ப்­பது நல்­லது.கேட்டைஆடை ஆப­ர­ணத்­தை­யும் அலங்­கா­ரத்­தை­யும் விரும்­பும் கேட்டை நட்­சத்­திர அன்­பர்­களே, இந்த புத்­தாண்­டில் காரிய அனு­கூ­லம் உண்­டா­கும். முக்­கிய நபர்­க­ளின் உதவி கிடைக்­கும். தன்­னம்­பிக்கை அதி­க­ரிக்­கும். துணிச்­ச­லு­டன் செயல்­பட்டு எடுத்த காரி­யத்தை சிறப்­பாக செய்து முடிப்­பீர்­கள். பண­வ­ரவு இருக்­கும்.இட­மாற்­றம்,வெளி­யூர் பய­ணங்­கள், அலைச்­சல் ஆகி­யவை இருக்­கும். தொழில், வியா­பா­ரம் போன்­றவை முன்­னேற்­றப் பாதை­யில் செல்­லும். அரசு தொடர்­பான காரி­யங்­க­ளில் சாத­க­மான பலன் கிடைக்­கும். உத்­தி­யோ­கத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்கு கட்­டளை இடு­கின்ற பதவி கிடைக்­கும். புதிய வேலைக்கு முயற்சி செய்­கி­ற­வர்­க­ளுக்கு வேலை கிடைக்­கும். குடும்­பத்­தில் மகிழ்ச்­சி­யான நிலை காணப்­ப­டும். யாரி­ட­மும் எதிர்த்­துப் பேசி விரோ­தத்தை வளர்த்­துக் கொள்­ளா­மல் இருப்­பது நன்மை தரும்.கண­வன், மனை­விக்­கி­டையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்­வார்­கள். பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லம் பற்­றிய எண்­ணம் மேலோங்­கும். பெண்­கள் எந்த செய­லை­யும் தைரி­ய­மாக செய்து முடிப்­பீர்­கள். எதிர்­பா­ராத திடீர் செல­வு­கள் வீண் அலைச்­சல் உண்­டா­க­லாம். கலைத்­து­றை­யி­னர் கிடைத்த வாய்ப்பை தவ­ற­வி­டா­மல் சாத­க­மாக பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம்.புத்­தி­சா­தூர்­யம் மூலம் காரிய வெற்றி கிடைக்­கும். அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு பாராட்டு கிடைக்­கும். மனக்­க­வலை ஏற்­ப­டும். உடல்­சோர்வு உண்­டா­கும். மாண­வர்­கள் கல்­வி­யில் வெற்றி பெற வேண்­டும் என்ற நோக்­கத்­தில் கஷ்­ட­மான பாடங்­க­ளை­யும் மனம் துவ­ளா­மல் படிப்­பீர்­கள்.திருவோணம்இரு­த­ரப்பு வாதங்­க­ளை­யும் கேட்டு அதன்­பி­றகே நியா­யத்­தைச் சொல்­லும் குண­மு­டைய திரு­வோண நட்­சத்­திர அன்­பர்­களே! இந்­தப் புத்­தாண்­டில் எதிர்ப்­பு­கள் நீங்­கும். நோய்­கள் நீங்கி உடல் ஆரோக்­கி­யம் உண்­டா­கும். பண­வ­ரவு எதிர்­பார்த்­ததை விட அதி­க­ரிப்­பது மன­ம­கிழ்ச்­சி­யைத் தரும். எதி­ரி­க­ளால் இருந்து வந்த பிரச்னை தீரும். நண்­பர்­கள் மூலம் தேவை­யான உத­வி­கள் கிடைக்­கும். உத்­தி­யோ­கத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்கு அலு­வ­ல­கப் பணி தொடர்­பான அலைச்­சல்­கள் இருக்­கும். சக ஊழி­யர்­க­ளின் ஒத்­து­ழைப்­பும் கிடைக்­கும்.பிள்­ளை­கள் தொடர்­பான காரி­யங்­களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்­கும். பெண்­க­ளது செயல்­க­ளுக்கு இருந்த முட்­டுக் கட்­டை­கள் வில­கும். எதிர்­பார்த்த உத­வி­கள் கிடைக்­கும். பண வரவு கூடும்.கலைத்­து­றை­யி­ன­ருக்கு தொழில் வாக்கு வன்­மை­யால் சிறப்­பாக நடக்­கும். மாண­வர்­க­ளுக்கு கல்­வி­யில் திறமை வெளிப்­ப­டும். கல்­வி­யில் வெற்றி பெற தேவை­யான உத­வி­கள் கிடைக்­கும்.உத்தரட்டாதிஎந்தப் பிரச்சினை­கள் வந்­தா­லும், எதிர்த்து நின்று சமா­ளிக்­கக் கூடிய ஆற்­றல் பெற்ற உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திர அன்­பர்­களே, இந்த புத்­தாண்­டில் வீண்­க­வலை ஏற்­பட்டு நீங்­கும். ஆன்­மி­கத்­தில் நாட்­டம் அதி­க­மா­கும். நெருங்­கிய நண்­பர்­க­ளி­டம் மனஸ்­தா­பம் ஏற்­ப­ட­லாம். தொழில், வியா­பா­ரத்­தில் ஈடு­பட்டு இருப்­ப­வர்­கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் அனு­ச­ரித்­துச் செல்­வது நன்மை தரும். உத்­தி­யோ­கத்­தில் இருப்­ப­வர்­கள் வேலைப் பளு ஏற்­பட்­டா­லும், எப்­ப­டி­யா­வது செய்து முடித்து விடு­வார்­கள். சக ஊழி­யர்­கள் ஒத்­து­ழைப்­பும் இருக்­கும்.குடும்­பத்­தில் இருப்­ப­வர்­க­ளு­டன் ஏதா­வது ஒரு­வ­கை­யில் வாக்­கு­வா­தம் உண்­டா­கும். கண­வன், மனை­விக்­கி­டையே சிறு­சிறு மனஸ்­தா­பம் உண்­டா­கும். சகோ­த­ரர்­க­ளி­டம் கருத்து வேற்­றுமை ஏற்­ப­ட­லாம். வெளி­யூர் பய­ணங்­கள் செல்ல வேண்டி இருக்­கும். பெண்­கள் அடுத்­த­வர்­க­ளி­டம் பேசும் போது யாரைப் பற்­றி­யும் விமர்­சிக்­கா­மல் இருப்­பது நல்­லது. பண­வ­ர­வில் தாம­தம் இருக்­கும். மாண­வர்­க­ளுக்கு கல்­வி­யில் பின்­தங்­கிய நிலை மாற கூடு­தல் கவ­னத்­து­டன் அதிக நேரம் ஒதுக்கிப் பாடங்­களை படிப்­பது அவ­சி­யம்.ரேவதிஅனைவரிடமும் அனுசரித்துச் செல்லும் குணமுடைய ரேவதி நட்சத்திர அன்பர்களே! இந்தப் புத்தாண்டில் பணவரவு கூடும். ஆன்மிகச் செலவுகள் உண்டாகும். காரியத்தடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்தக் காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.தொழில், வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக் கூடும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். புதிய பதவிகள் தேடிவரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.பூராடம்எந்த ஒரு காரி­யத்­தி­லும் இலாப­நஷ்­டம் பார்க்­கும் குண­மு­டைய பூராட நட்­சத்­திர அன்­பர்­களே, இந்த புத்­தாண்­டில் விருப்­பத்­திற்கு மாறாக காரி­யங்­கள் நடக்­க­லாம். மனக்­கு­ழப்­பம் உண்­டா­க­லாம். பொருள்களை கவ­ன­மாக பார்த்­துக் கொள்­வது நல்­லது. அடுத்­த­வ­ரு­டன் சில்­லறை சண்­டை­கள் ஏற்­ப­ட­லாம். வயிறு தொடர்­பான நோய் ஏற்­ப­ட­லாம். பண­வ­ரவு இருக்­கும். பய­ணங்­கள் மகிழ்ச்சி தரு­வ­தாக இருக்­கும். தொழில், வியா­பா­ ரத்­தில் ஈடு­பட்டு இருப்­ப­வர்­கள் கடு­மை­யாக உழைக்க வேண்டி இருக்­கும். உத்­தி­யோ­கத்­தில் இருப்­ப­வர்­கள் சக ஊழி­யர்­க­ளு­டன் வாக்­கு­வா­தங்­க­ளைத் தவிர்ப்­பது நல்­லது.குடும்­பத்­தில் இருப்­ப­வர்­க­ளின் செயல்­பா­டு­கள் உங்­க­ளது கோபத்தை தூண்­டு­வ­தாக இருக்­க­லாம். அனு­ச­ரித்­துச் செல்­வது நல்­லது. கண­வன், மனை­விக்­கி­டையே கருத்து வேறு­பாடு ஏற்­பட்டு நீங்­கும். பிள்­ளை­க­ளின் முன்­னேற்­றத்­திற்­காக பாடு­ப­டு­வீர்­கள். பெண்­க­ளுக்கு காரி­யத் தடை­யால் மனக் குழப்­பம், பதற்றம் உண்­டா­க­லாம். பண­வ­ரவு இருக்­கும். கலைத்­து­றை­யி­ன­ருக்கு ஒப்­பந்­தங்­கள் எடுப்­ப­தில் கவ­னம் தேவை. மாண­வர்­கள் யாரி­ட­மும் வாக்­கு­வா­தம் செய்­யா­மல் அனு­ச­ரித்­துச் செல்­வது நல்­லது. மிக­வும் கவ­ன­மாக பாடங்­க­ளைப் படிப்­பது வெற்­றிக்கு உத­வும்.சதயம்சின்ன விடயங்­க­ளுக்­குக் கூட அதி­கம் உணர்ச்சி வசப்­ப­டக் கூடிய சத­யம் நட்­சத்­திர அன்­பர்­களே, இந்த புத்­தாண்­டில் அடுத்­த­வ­ரு­டன் ஏற்­ப­டும் பிரச்­னை­க­ளி­லும் வாக்­கு­வா­தத்­தி­லும் வெற்­றியே கிடைக்­கும். பண­வ­ர­வும் கூடும். ஆனால் எந்­தக் காரி­யத்­தில் ஈடு­பட்­டா­லும் அடுத்­த­வரை நம்­பு­வ­தி­லும் எச்­ச­ரிக்கை தேவை. உங்­க­ளுக்கு மிக­வும் வேண்­டி­ய­வர் உங்­களை விட்டு வில­கிச் செல்­ல­லாம்.குடும்­பத்­தில் இருப்­ப­வர்­கள் உங்­களை அனு­ச­ரித்­துச் செல்­வது மன­துக்கு இத­மாக இருக்­கும். கண­வன், மனை­விக்­கி­டையே சிறிய வாக்­கு­வா­தம் ஏற்­ப­ட­லாம். பிள்­ளை­கள் உங்­க­ளைப் புரிந்து கொண்டு நடப்­பது மன­துக்கு நிம்­ம­தி­யைத் தரும். கலைத்­து­றை­யி­ன­ருக்கு மனதுக்குத் திருப்­தி­ய­ ளிக்­கும் வகை­யில் அனைத்து விஷ­யங்­க­ளும் நடக்­கும். மாண­வர்­க­ளுக்கு கல்­வி­யில் இருந்த போட்­டி­கள் வில­கும். பாடங்­களை படிப்­ப­தில் இருந்த இடை­யூ­று­கள் நீங்­கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *