நவீன குற்றச் செயல்கள்; மலேசிய நீதிபதிகளுக்கு அமெரிக்கா பயிற்சி

Please log in or register to like posts.
News

புத்ராஜெயா, ஜன.11- நவீன குற்றச்செயல்களாக கருதப்படும் பண மோசடி, பயங்கரவாதம் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப் படுத்தும் போது, அதனை கையாளும் முறை குறித்து அமெரிக்க நீதித்துறை, மலேசிய நீதிபதிகளுக்கும் நீதித் துறை அதிகாரிகளுக்கும் பயிற்சியளித்து வருகிறது என்று டான்ஸ்ரீ ரிச்சர்ட் மலாஞ்ஜும் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில், குற்றவாளிகள் புரியும் குற்றச் செயல்கள் அதிநவீன வகையில் நிகழ்த்தப் படுவதால், அது குறித்து விழிப்புணர்வு மற்றும் அதன் தொடர்பிலான விவரங்களை நீதிமன்றங்கள் அறிந்துக் கொள்ளும் பொருட்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன என்றும் அவர் விவரித்தார்.

“பண மோசடி, பண பரிமாற்றங்களில் ஊழல்கள் புரியும் குற்றச் செயல்கள், ஏமாற்று வேலைகள், பயங்கரவாதம் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றச் செயல்கள் நவீன குற்றச்செயல்களாக பட்டியலிடப் பட்டுள்ளன” என்று அவர் சொன்னார்.

அந்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் நீதிகளை வழங்கும் நீதிபதிகளுக்கு, நீதித்துறை நியமன ஆணையத்தின் கீழ் செயல்படும் நீதித்துறை அகாடமி சில பயிற்சிகளை வழங்கி வருவதாக மலாஞ்ஜும் தெரிவித்தார்.

.

The post நவீன குற்றச் செயல்கள்; மலேசிய நீதிபதிகளுக்கு அமெரிக்கா பயிற்சி appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *