நான் பந்தா பண்ணுகிறேனா? – சாய் பல்லவி விளக்கம்

பிரேம், கரு, மாரி 2 படம் மூலம் மிகவும் பிரபலமான சாய் பல்லவி, நான் பந்தா பண்ணுவதாக வந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். #SaiPallavi

பிரேமம் படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி தனுசுடன் ரவுடி பேபி பாடலுக்கு ஆடியதன் மூலம் தமிழிலும் நன்கு பிரபலமாகி விட்டார். அடுத்து சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கதை சொல்ல சாய் பல்லவியை அணுகுவது சிரமம் என்று ஒரு வதந்தி பரவுகிறது. இதுபற்றி சாய் பல்லவியிடம் கேட்டபோது “நான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண். திடீர் என்றுதான் சினிமா வெளிச்சம் என்மேல் விழுந்தது. ஒரே படத்தில் இந்தியா முழுக்க தெரிந்த நடிகையாக மாறினேன்.

ஆனால் எந்த நிலையிலும் நான் பந்தா பண்ணியதோ, கர்வமாக நடந்துக் கொண்டதோ கிடையாது. நான்தான் பெரிய நடிகை என்று பந்தா பண்ணுகிறேன் என்றால் நாளைக்கே இன்னொரு திறமையான நடிகை வந்து, மற்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளிவிடுவார்.

அதனால்தான் சொல்கிறேன், எப்பவுமே நான் பந்தா பண்ண மாட்டேன். என்னை முறைப்படி அணுகி பேசினால், அவங்க சொல்ற கதையும், அதில் என் கேரக்டரும் பிடிச்சிருந்தா நடிப்பேன். சினிமாவை பொறுத்தவரை எதுவும் நிரந்தரம் கிடையாது. இன்றைக்கு சாதாரண நிலைமையில் இருக்கிறவங்க, நாளைக்கே பெரிய இடத்துக்கு வரலாம்” என்று கூறினார்.

Related Tags :

 சாய் பல்லவி பற்றிய செய்திகள் இதுவரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *