நாய்க்கு பெயர் வைத்ததால் விபரீதம்: நபருக்கு சிறைவாசம்!

பெய்ஜிங்,மே.16- சீனாவில் சட்டத்திற்குப் புறம்பான பெயர்களை நாய்களுக்கு வைத்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் தள்ளியுள்ளனர்.

சீனாவில், அன்ஹூய் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான பென் என்கிற இளைஞர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இரு நாய்களுக்கு செங்க்குவான்- சைக்குவான் எனப் பெயர் வைத்துள்ளார். அதனை சமூக வலைத்தளமான விசாட் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவானது, போலீசாரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து உடனடியாக விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை கைது செய்தனர்.

சீனாவில் ‘செங்க்குவான்’ என்றால் நகர்புறங்களில் சிறிய குற்றங்களை கண்காணிப்பவர்களை குறிக்கும். சைக்குவான் என்றால் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகளை குறிக்கும்.

இந்த இரண்டு பெயர்களுமே போலீஸ்காரர்களை குறிப்பதாக கருதப்படுகிறது. நாய்களுக்கு இப்படி பெயர் வைத்து சட்ட அமலாக்க அதிகாரிகளை அவமானப்படுத்தியதால் தற்போது இளைஞர் சிறப்பு காவலில் தடுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள பென், “இது சட்டவிரோதமானது என்பது எனக்கு தெரியாது. நான் விளையாட்டாக என் இரு நாய்களுக்கு பெயர் வைத்தேன்” என்று கூறியுள்ளார்.

The post நாய்க்கு பெயர் வைத்ததால் விபரீதம்: நபருக்கு சிறைவாசம்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *