நாய் – பூனை கறிகளுக்கு தடை: பொதுமக்கள் கவலை

Please log in or register to like posts.
News
அமெரிக்க பாராளுமன்றத்தில் நாய் மற்றும் பூனைகளை இறைச்சிக்காக கொள்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு இடங்களில் நாய் மற்றும் பூனைகளை இறைச்சிக்காக கொள்கின்றனர். பல மக்கள் அவற்றை விரும்பியும் சாப்பிடுகின்றனர். சீனாவில் வருடந்தோறும் நடைபெறும்  நாய்கறி திருவிழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று கூடிய அமெரிக்க பாராளுமன்றத்தில் அமெரிக்கர்கள் நாய், பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.  இனி அமெரிக்காவில் நாய்கள் மற்றும் பூனைகள் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், மேலும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
cat
நாய், பூனை கறிக்கு தடை விதிக்கக்கோரி சீனா, தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் நாய்க்கறி விற்பனையை தடுக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் நாய் மற்றும் பூனை இறைச்சி சாப்பிடுவோர் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *