நாளைய இரு பேரணிகளில் ஒன்று ரத்து!

Please log in or register to like posts.
News

கோலாலம்பூர்,டிச.07- சுஹாக்காம் எனப்படும் மனித உரிமை ஆணையம் ஏற்பாட்டில் நாளை நடக்கவிருந்த மனித உரிமை தினக் கொண்டாட்டம் வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி இந்நிகழ்ச்சியை ஒத்தி வைப்பதுதான் நல்லது என்று போலீஸ் சுஹாக்காம்மையும் பிரதமர் அலுவலகத்தையும் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுஹாகாம்மின் தலைவர் டான்ஶ்ரீ ரஸாலி இஸ்மாயில் தெரிவித்தார்.

ஐசெர்ட் ஒப்பந்தத்திற்கு எதிரான தரப்பு நாளை ஏற்பாடு செய்திருக்கும் பேரணி காரணமாகவே இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இது தொடர்பில் மேலும் கருத்துரைக்க போலீஸ் படை மறுத்து விட்டதாக ரஸாலி குறிப்பிட்டார்.

“மனித உரிமையை பேணுவது அரசாங்கத்தின் கடப்பாடு என்றாலும்கூட சிலரது தீவிரமான நெருக்குதலால் சில மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு விட்ட மனித உரிமை தினக் கொண்டாட்டத்தை தள்ளி வைக்க வேண்டியதாயிற்று” என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.

மனித உரிமை தினக் கொண்டாட்டம் நாளை பெட்டாலிங் ஜெயா, பாடாங் தீமோரில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவிருந்தது. அக்கொண்டாட்டத்திற்கு பிரதமர் துன் மகாதீர் தலைமையேற்பதாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post நாளைய இரு பேரணிகளில் ஒன்று ரத்து! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *