நியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா

பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா.

பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் ஆட்டம் 49-வது ஓவராக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் குயின்டன் டி காக், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். டி காக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த டு பிளிசிஸ் 23 ரன்களும், மார்கிராம் 38 ரன்களும் சேர்த்தனர். ஹசிம் அம்லா 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 37 பந்தில் 36 ரன்களும், வான் டெர் டஸ்ஸன் 64 பந்தில் 67 ரன்கள் எடுக்கவும் தென்ஆப்பிரிக்கா 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் நியூசிலாந்தின் வெற்றிக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *