பகாங் அரியணை: இன்று பிற்பகலில் துங்கு அப்துல்லா மீதான முடிவு!

கோலாலம்பூர், ஜன.12- பகாங் மாநில ரீஜெண்டான துங்கு அப்துல்லா, மாநில சுல்தானாக அரியணை அமர்வது குறித்த முடிவு இன்று பிற்பகலில் அறிவிக்கப்படவிருக்கிறது.

நேறு நடந்த பகாங் அரசமன்றத்தின் கூட்டம் 4 மணிநேரத்திற்கு மேலாக விவாதித்தது என்ற போதிலும் அந்தச் சந்திப்பு குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட அம்சங்கள் மற்றும் முடிவுகள் தொடர்பாக இன்று அறிவிக்கப்படும் என்று மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் சாலேஹுடின் தெரிவித்தார்.

‘நீங்கள் பகாங் மாநில அரியணையில் அமரப் போகிறீர்களா?’ என்று நிருபர்கள் கேட்ட போது அதற்கு நேரடியாக பதில் கூறவில்லை. அதேவேளையில் நிருபர்களில் ஒருவர் அவருக்கு வாழ்த்துக் கூறிய போது நன்றி தெரிவித்துக் கொண்டார்.

எனினும் அண்மையில் மாமன்னர் பொறுப்பில் இருந்து கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகம்மட் விலகிக் கொண்ட நிலையில் அடுத்த மாமன்னர் நியமனம் குறித்து பரவலாக பேசப்படுகிறது.

அடுத்த மாமன்னருக்கான அரச வரிசையில் 88 வயதுடைய பகாங் சுல்தான் அகமட் ஷா இருக்கிறார் என்றாலும் அவர் நலம் குன்றி இருப்பதால் அடுத்த சுல்தானாக பகாங் ரீஜெண்ட் துங்கு அப்துல்லா பொறுப்பேற்ற பின்னர், மாமன்னர் பதவியை ஏற்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இத்தகைய சூழ்நிலையிலேயே பகாங் அரச மன்றம் நேற்றுக் கூடியது. இதன் முடிவு குறித்து இன்று பிற்பகலில் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்படும்.

The post பகாங் அரியணை: இன்று பிற்பகலில் துங்கு அப்துல்லா மீதான முடிவு! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *