பசியால் துடிதுடித்து இறந்த 7 மாத குழந்தை: – வீட்டில் தனியாக விட்டு சென்ற பெற்றோர்!

சியோல், ஜூன்.13- சுமர் ஒரு வார காலத்திற்கு வீட்டில் தனியாக விட்டுச் செல்லப்பட்ட 7 மாத பெண் குழந்தை பசியல் வாடி இறந்த சம்பவம் தொடர்பில் அதன் பெற்றோர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்குழந்தையின் பெற்றோர்கள் இருவருக்கும் கடந்த மே 23ஆம் தேதி கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் முன் பின்னாக வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இருவரும் தொடர்பு கொள்ளாத நிலையில் குழந்தையை அவர்களில் யாராவது ஒருவர் பராமரித்துக் கொள்வர் என எண்ணி உள்ளனர்.

இந்நிலையில் அவ்விருவரும் சுமார் ஒரு வாரக் காலமாக வீடு திரும்பவில்லை. அக்குழந்தையின் தாயார், “என் கணவர் எனக்கு துரோகம் இழைத்து விட்டார். நாங்கள் இருவரும் தற்பொழுது ஒன்றாக இல்லை” என தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் தினமும் தான் மது அருந்தும் புகைப்படத்தையும் அங்கு பதிவு செய்துள்ளார்.

அவரின் கணவர், வீட்டை விட்டு சென்றதை அடுத்து கணினி மையத்தில் தினமும் “வீடியோ கேம்” விளையாடி வந்துள்ளார் என கூறப்படுகின்றது. ஒரு வாரம் கழித்து மே 31ஆம் தேதி வீடு திரும்பிய அவர், குழந்தை இறந்திருப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து தம்பதியினர் இருவரும் அக்குழந்தையின் சடலத்தை ஒரு அட்டை பெட்டியில் வைத்து மறைக்க முற்பட்டுள்ளனர்.

ஆனால் அக்குழந்தையின் அப்பாவின் தகப்பனார் (தாத்தா) , சடலைத்தை கண்டதை அடுத்து காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்குழந்தையின் தலை, கை, கல் பகுதிகளில் நாய் கீரிய தடயங்கள் உள்ளன. மேலும்  வயிற்றில் உணவு ஏதும் இல்லாததால் பசியால் அக்குழந்தை இறந்திருக்க் கூடும் என சவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தை கொரியா ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

The post பசியால் துடிதுடித்து இறந்த 7 மாத குழந்தை: – வீட்டில் தனியாக விட்டு சென்ற பெற்றோர்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *