பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு டோனி கொடுக்கும் தண்டனை – பாடி ஆப்டனின் ருசிகர தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, அணியின் மீட்டிங் மற்றும் பயிற்சி ஆகியவற்றிற்கு வீரர்கள் தாமதமாக வந்தால் அவர் தரும் தண்டனை குறித்து பாடி ஆப்டன் ருசிகர தகவலை தந்துள்ளார்.

புது டெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, பல வெற்றி தருணங்களில் வீரர்களை திறம்பட வழி நடத்தியுள்ளார். அவர் இந்திய அணிக்கு கேப்டன் ஆன போது ஒரு வலிமையான அடித்தளத்தை நிறுவினார் என அணியின் மனநல பயிற்சியாளர் பாடி ஆப்டன் கூறினார். பாடி ஆப்டன் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிவித்தார். டோனி வீரர்களை கையாண்ட முறை குறித்து பாடி ஆப்டன்  கூறியதாவது:

டோனி  அணி மீட்டிங்கிற்கும், பயிற்சிக்கும் வீரர்கள் சரியான நேரத்திற்கு வராமல் தாமதித்தால், அவர்கள் மீண்டும் இப்படி செய்யக்கூடாது என்பதற்காகவும், குறித்த நேரத்திற்கு வருவது ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்த்த ஒரு முறையை கையாண்டார்.

நான் இந்திய அணியில் இணைந்த போது டெஸ்ட் போட்டிகளுக்கு அனில் கும்ப்ளே கேப்டனாகவும், ஒருநாள் போட்டிக்கு டோனி கேப்டனாகவும் இருந்தார். வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் நேரத்தை ஒழுங்குப்படுத்த  வேண்டும் என்ற முனைப்பில்  இருவரும் கவனமாக இருந்தனர்.

பயிற்சிக்கான நேர கணக்கை அணி தலைவரே தீர்மானிக்கலாம்  என நிர்வாகம் முடிவெடுத்தது. கும்ப்ளே இதற்காக ஒரு வழியை கண்டறிந்தார். தாமதமாக பயிற்சிக்கு வரும் வீரர் ரூ.10,000 அபராதம் கட்ட வேண்டும் என்றார்.

டோனி ஒரு படி மேலே சென்று,  ஒரு வீரர் தாமதமாக பயிற்சிக்கு வந்தால் அணியில் உள்ள அனைவரும் ரூ.10,000  அபராதம் கட்ட வேண்டும் என்றார். டோனியின் உண்மையான பலம் என்பது அவரது அமைதியான குணம் , சூழலுக்கு ஏற்ப செயல்படுவது ஆகும்.  இது தான் அவரை வலிமையான தலைவராக வைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *