பரசூட்டிலிருந்து விழுந்த இராணுவ சிப்பாய் பலி!

திருகோணமலை குச்சவெளி, கும்புறுபிட்டி பகுதியில் இடம்பெறும் தியாகாவா போர் பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ கொமாண்டோ படையணியை சேர்ந்த ஒரு சிப்பாய் பரசூட்டில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) நடந்தது.

தியாகாவா போர் பயிற்சி திருகோணமலையின் கும்புறுபிட்டியில் நடைபெற்று வருகிறது. இதன்போது பாராசூட்டில் குதித்த சிப்பாய் நீரில் மூழ்கினார். அவரை மீட்டு திருகோணமலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் உயிரிழந்தார்.

உயரிழந்தவர்  4 வது இராணுவ கொமாண்டோ படையணியின் காலி பகுதியைச் சேர்ந்த 35 வயது இராணுவ வீரர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *