பல நாள் பட­கு­களை மீன­வர் மானி­யத்­தில் பெற வாய்ப்பு !!

பல நாள்­கள் பட­கு­க­ளைப் பெற்­றுத் தொழில் புரிய விரும்­பும் யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த மீன­வர்­கள், பல­நாள் பட­கு­களை 50 வீத மானி­யத்­தில் பெற்­றுக்­கொள்­ள­மு­டி­யும் என்று யாழ்ப்­பாண மாவட்ட நீரி­யல் வளத்­து­றைத் திணைக்­க­ளப் பிர­திப் பணிப்­பா­ளர் சுதா­க­ரன் தெரி­வித்­தார்.

குறித்த வகைப் பட­கின் பெறு­மதி 25 மில்­லி­யன் ரூபா. இவற்­றைப் பெற விரும்­பு­வோர் தமது திணைக்­க­ளத்­து­ டன் தொடர்­பு­கொள்­ள­வும். மீன­வர்­கள் 12.5 மில்­லி­யன் ரூபா­வைச் செலுத்­திப் பதிவு செய்­தால் படகு வழங்­கப்­ப­டும்.

பல நாள் மீன்­பி­டியை நாட்­டில் ஊக்­கு­விக்­கும் நோக்­கில் அரசு இந்­தத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றது என்று பிர­திப் பணிப்­பா­ளர் தெரி­வித்­தார்.

இந்த வகைப்படகு 55 அடி நீள­மா­னது. ராடர், குளி­ரூட்டி என கட­லில் தங்கி இத்­த­கைய பட­கு­க­ளைப் பெற்­றுக்­கொள்ள விரும்­பும் மீன­வர்­கள் அல்­லது அமைப்­புக்­கள் அதற்­கான பதி­வு­களை மேற்­கொள்ள முடி­யும். பதி­வு­களை மேற்­கொள்­ப­வர்­கள் பட­கைப் பெற்­றுக்­கொள்­ளும்­போது 12.5 மில்­லி­யன் ரூபா­வைச் செலுத்த வேண்­டும்.

இது­த­விர, இந்த வகைப் படகை வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு இறங்கு துறை அல்­லது பிர­தேச கட்­டுப்­பா­டு­கள் கிடை­யாது. அத­னால் தாம் விரும்­பிய பகு­தி­யில் இருந்து புறப்­ப­டும் வாய்ப்­பும் உள்­ளது – என்று பிர­திப் பணிப்­பா­ளர் மேலும் தெரி­வித்­தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *