பள்ளி ஓய்வு நேரத்தில் சிற்றுண்டி “மக்சி”க்கு உதவும் மாணவன் !

கோலாலம்பூர், ஜூலை.18-  பள்ளி ஓய்வு நேரம்  மாணவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அந்நேரத்தில் அவர்கள் முண்டியடித்து கோண்டு செல்வதிலிருந்து உணர முடிகின்றது. இந்த நேரத்தை அவர்கள் உணவருந்துவது, விளையாடுவது, அரட்டை அடிப்பது, படிப்பது என பல வகையில் கழிப்பர்.

ஆனால் மாணவன் ஒருவன் தினமும் தனது ஓய்வு நேரத்தை வேறொருவரின் நலனுக்காக செலவிடுகின்றான். அவனின் இந்த செயல் தற்பொழுது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டினை பெற்றுள்ளது.

ஶ்ரீ பிந்தாங் உத்தாரா இடைநிலைப்பள்ளியில் நான்காம் படிவம் பயிலும் ஹோவ் என்ற மாணவன் தினமும் தனது ஓய்வு நேரத்தில் பள்ளி சிற்றுண்டியில் வியாபாரம் செய்து வரும் மாதுவிற்கு தாமாக முன் வந்து உதவி செய்கின்றான்.

இந்த தகவலை புகைப்படத்துடன் ரெட்ஸுவான் அஸிஸான் எனும் நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். ஆசிரியரான அவர், அண்மையில் அப்பள்ளிக்கு சென்ற போது இந்த சம்பவத்தை கண்டுள்ளார்.

சீன பையனான அவன் மலாய் மாதுவிற்கு  உதவ முன் வந்துள்ளது போற்றுதலுக்குரியதாகும். மேலும் அந்த மாணவன் சுகாதரத்தை கருத்தில் கொண்டு கையுறை அணிந்த பின்பு தான் உணவு பொருட்களில் கை வைக்கின்றான். உணவு வாங்க நிறைய மாணவர்கள் வரிசையில் நின்றாலும் அவன் நிதானமாகவே செயல்ப்படுகின்றான்  என்ற தகவலையும் அந்நபர் பகிர்ந்துள்ளார்.

இதனிடையே, அந்த மாணவன் தாமாக முன் வந்து எனக்கு உதவி புரிகின்றான். அவனுக்கு நான் ஊதியம் ஏதும் தரவில்லை. சில சமயம் உணவு எடுத்து உண்பான் என அம்மாது குறிப்பிட்டதாகவும் அப்பதிவேற்றத்தில் தகவல் உள்ளது.

இந்த பதிவு தற்பொழுது மக்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்துள்ளது. அம்மாணவனின் உன்னத செயலை  பாராட்டி நெட்டிசன்கள் அப்பதிவேற்றத்தை பகிர்ந்து வருகின்றனர்.

The post பள்ளி ஓய்வு நேரத்தில் சிற்றுண்டி “மக்சி”க்கு உதவும் மாணவன் ! appeared first on Vanakkam Malaysia.