பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் – தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்களில் ஆல் அவுட்

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #SAvPAK

ஜோகனஸ்பர்க்:

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. ஏற்கனவே, தென்ஆப்பிரிக்கா அணி 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கிராமும், எல்கரும் களமிறங்கினர். எல்கர் 5 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஆம்லா நிதானமாக ஆடினார். அவர்41 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய டி புருயின் அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 49 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மார்கிராம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 90 ரன்னில் வெளியேறினார்.

தேனீர் இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா வீரர்கள் நிதானமாக ஆடினர். அதன்பின் ஆட்டம் தொடங்கியதும் பாகிஸ்தான் வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். ஹம்சா 41 ரன்னில் அவுட்டானதும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது. இறுதியில், தென் ஆப்பிரிக்கா 77.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் தரப்பில் பாஹிம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமீர், மொகமது அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.  #SAvPAK

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *