பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் வன விலங்குகள் மூலம் மோடிக்கு மிரட்டல் விடுத்த பெண்!

பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து குறித்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிதை தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்…

பாகிஸ்தானைச் சேர்ந்த ரபி பிர்சாடா என்ற பெண் கடந்த 5 ஆம் திகதி தனது டுவிட்டர் பக்கத்தில் முதலைகள், பாம்புகளை வைத்து கணொளி ஒன்றை வெளியிட்டார்.

அந்த காணொளியில் நான் காஷ்மீர் பெண். இந்த பரிசுகள் (பாம்புகள், முதலைகள்) மோடிக்காகத்தான். நீங்கள் காஷ்மீர் மக்களை மிகவும் துன்புறுத்துகிறீர்கள். இதற்காக இவற்றை தயாராக வைத்துள்ளேன்.

நீங்கள் நரகத்தில் இறக்க தயாராக இருங்கள். என் நண்பர்களாகிய இவர்கள் (பாம்புகள், முதலைகள்) உங்களுக்கு விருந்து வைப்பார்கள். என தெரிவித்துள்ளார்.

இந்த கணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதி வனத்துறை, ரபி சட்ட விரோதமாக வன விலங்குகளை வீட்டில் வைத்திருப்பதாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது குறித்து நீதிமன்றமும் ரபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *