பாடசாலைக்குள் வெறியாட்டம்……..19 பேர் துடிதுடித்துப் பலி…!!

Please log in or register to like posts.
News

கிரிமியா நாட்டிலுள்ள பாடசாலையொன்றில் மாணவன் ஒருவன் சக மாணவர்களை மூர்க்கத்தனமாக சுட்டுப் படுகொலை செய்தமை உலகையே அதிர வைத்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நடந்த இந்த கோரச் சம்பவத்தில் 19 மாணவர்கள் குருதி சிந்திப் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் 12க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சக மாணவர்கள் என்றும் பாராமல் குறித்த மாணவர் எதற்காக இவ்வாறு மிருகத்தனமாக நடந்துகொண்டார் என்பது தொடர்பில் தெரியவரவில்லை என கிரிமிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட குறித்த மாணவன் இறுதியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தகதாகும்.

குறித்த பகுதியில் கிரிமிய நாட்டின் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *