பாம்பு குறித்த ஆய்வில் பங்கேற்க முன்வராத சுவிஸ் நாட்டவர்கள்

பாம்பு குறித்த அச்சத்தை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வில் பங்கேற்க ஆட்களைப் பிடிப்பதற்கு பேஸல் பல்கலைக்கழகம் போராடி வருகிறது, எதனால் என்று தெரிந்தால் ஒரு வேளை நீங்கள் ஆச்சரியப்படலாம்.
பேஸல் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை சார்பில் நடத்தப்படவிருக்கும் இந்த ஆய்வுக்காக 18 முதல் 35 வயது வரையுள்ள சுமார் 90 பேரை தேர்ந்தெடுக்க ஆய்வுக் குழுவினர் முடிவு செய்தனர்.
ஆய்வில் பங்கேற்பவர்களுக்கு ஆளுக்கு 120 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுக்க முடிவு செய்து இந்த ஆண்டின் மத்தியில் அந்த ஆய்வு முடிவை வெளியிட குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
பாம்பு குறித்து பயப்படும் மக்களை கவரும் வண்ணம் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்றை வெளியிட்டு பல மாதங்கள் ஆன பின்னும் வெறும் 30 பேர் மட்டுமே ஆய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
உயிருள்ள ஆனால் விஷத்தன்மையற்ற பாம்புடன் பழக வேண்டியுள்ள இந்த ஆய்வில் இன்னும் அதிகமானோரை பங்கேற்கச் செய்வதற்காக சுவிஸ் நகரம் முழுவதும் பயணிக்கும் ட்ராம்களில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மக்களுக்கு மிக அதிக பயம் இருந்ததால்தான் இந்த ஆய்வில் பங்கேற்க தயங்குகிறார்கள் என்று முதலில் தோன்றினாலும் பின்னர் உண்மையான காரணம் என்ன என்று தெரியவந்தபோது அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பாம்புகள் மீதான பயம் சிலந்திகள் மீதான பயம் போன்றதுதான் என்று கூறும் பேஸல் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறையைச் சேர்ந்த Nathalie Schicktanz, சுவிட்சர்லாந்தில் பாம்புகளே இல்லாததால் இங்குள்ளவர்கள் பாம்புகளைப் பார்ப்பதே அரிது, எனவே இந்த ஆய்வுக்காக முதல் முறையாக பாம்புகளை பார்ப்பதால் அவர்களுக்கு பயமே ஏற்படவில்லை என்பது தெரியவந்தது என்கிறார்.
எனவே ஆய்வுக்கு ஆள் கிடைக்காததற்கு காரணம் பயம் என்று ஆய்வுக் குழுவினர் முதலில் எண்ணிய நிலையில் பின்னர் பாம்பு குறித்த பயம் இல்லாததுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *