பாரிசான் எம்.பி.களுடன் சந்திப்பு: ஒற்றுமை முக்கியம்!  -பிரதமர் 

by admin | 16/04/2018 10:05 am

புத்ராஜெயா, ஏப்ரல்.16- இன்று ஶ்ரீ பெர்டானாவில்  தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறப்பு சந்திப்பை நடத்திய பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், கட்சியில் அனைவரும்  ஒற்றுமையாக செயல் பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

காலை 9 மணிக்கு தொடங்கிய அந்தச் சிறப்புச் சந்திப்பு, சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. 

அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் தங்களிடம் கேட்டுக் கொண்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

தேசிய முன்னணியின் சார்பில் இதுவரை சிறப்பாக செயலாற்றி விடைபெறும் உறுப்பினர்களிடம், அவர்களின் சேவைக்கு பிரதமர் நன்றி தெரிவித்ததாக சந்துபோங் (முன்னாள்) நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் ஜுனைடி துவாங்கு ஜப்பார் கூறினார். 

“இந்தப் பொதுத் தேர்தலில் சிலர் மீண்டும் வேட்பாளராக நியமிக்கப்படலாம். சிலர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறாமல் போகலாம். எது நடந்தாலும், தேசிய முன்னணி உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று பிரதமர் கூறியதாக முன்னாள் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ எம்.சரவணன் சொன்னார். 

இந்தச் சந்திப்பின் போது தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் விசுவாத்தின் அவசியம் குறித்தும் நஜிப் பேசியதாக பெர்லீஸ் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ ஷாஹிடான் காசிம் கூறினார். 

 

Source URL: http://www.tamilarnet.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8/