பாலியல் காணொளி: ஹாஸிக் பணி நீக்கம் ; அமைச்சு நடவடிக்கை!

புத்ரா ஜெயா, ஜூன்.20- ஓரின சேர்க்கை உறவு காணொளியில் வரும் நபர்கள் நானும் பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியுடம் தான் என வீடியோ பதிவு வெளியிட்ட முகமட் ஹாஸிக், மூலத் தொழில்துறை துணை அமைச்சர் சம்சுல் இஸ்கண்டாரின்  தனிப்பட்ட செயலாளர் பதவியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் மூலத் தொழில்துறை அமைச்சு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், அமைச்சர் ஒருவரை ஒரின சேர்க்கை காணொளியில் சம்பந்தப்படுத்தி பேசியது தொடர்பில் முகமட் ஹாஸிக்கை முன்னதாக அவர் வகித்து வந்த  துணையமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் பதவி ஒப்பந்தத்தை அமைச்சு ரத்து செய்துள்ளது. ஜூன் 18ஆம் தேதி முதல் இந்த ரத்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

முகமட் ஹாஸிக்கின் இந்த நடவடிக்கை, அமைச்சுடன் அவர் செய்து கொண்ட பணி ஒப்பந்தத்தில் உள்ள மதிப்புகள், நெறிமுறைகள் மற்றும் பொது சேவை விதிமுறைகள்
ஆகியவற்றை மீறும் வண்ணம் உள்ளது. எனவே அவரை அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளோம். இந்த பதவி நீக்கத்தை அடுத்து அமைச்சுக்கும் முகமட் ஹாஸிக்கிற்கும் இனி எவ்வித சம்பந்தமும் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே  துணை அமைச்சர் சம்சுல் இஸ்கண்டார்  இவ்விவகாரம் தொடர்பில் முகமட் ஹாஸிக் 3 நாட்களுக்குள் காரணக் கடிதம் வழங்க வழங்க வேண்டும் என கோரி கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று அவரை பணியிலிருந்து இடை நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பாலியல் காணொளி: ஹாஸிக் பணி நீக்கம் ; அமைச்சு நடவடிக்கை! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *