பினாங்கில் பேரங்காடியில் தொப்புள் கொடியோடு கைவிடப்பட்ட குழந்தை

Please log in or register to like posts.
News

ஜார்ஜ் டவுன், டிசம்.7- இங்கு தஞ்சோங் தொக்கோங் என்ற இடத்திலுள்ள தஞ்சோங் பினாங் டெஸ்கோ பேரங்காடியில், தொப்புள் கொடியோடு கைவிடப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான ‘பெம்பர்ஸ்’ மாற்றுவதற்கான அறையில் அந்தக் குழந்தைக் கைவிடப்பட்டிருந்தது. நேற்று மாலை 5.40 மணியளவில் அந்தக் குழந்தை அங்கு கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக ஜியார்ஜ் டவுன் ஓசிபிடி சே ஸைமானி அவாங் தெரிவித்தார்.

தொப்புள் கொடி அகற்றப்பட்டாத நிலையில் அந்தக் குழந்தை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டு ஒரு சோபாவின் மீது வைக்கப்பட்டிருந்தது.

உடனடியாக அந்தக் குழந்தை பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

The post பினாங்கில் பேரங்காடியில் தொப்புள் கொடியோடு கைவிடப்பட்ட குழந்தை appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *