பின்னணியில், வாய் புளித்த தலைவரா? வெளியான தகவல்!

தமிழகம் முழுவதும் இன்று பரபரப்பாக பேசப்பட்ட விவகாரம் எழுத்தாளர் ஜெயமோகன் புளித்த மாவு வாங்க போன விவகாரம் தான். எப்போதும் பொருட்கள் வாங்கும் கடைக்கு சென்று தோசை மாவு வாங்கி வந்து எழுத்தாளர் ஜெயமோகன் வீட்டில் தோசை மாவு புளித்து இருந்ததால் அதனை சென்று கடைக்காரரிடம் திருப்பி கொடுத்துள்ளார். அப்போது எழுந்த வாக்குவாதத்தின் போது மாவு பாக்கெட் கடைக்காரர் மனைவியின் மீது ஜெயமோகன் வீச முயற்சிக்க, அப்போது கடைக்காரரும், பிரபல கட்சி நிர்வாகியுமான செல்வம் ஜெயமோகனை தாக்கியுள்ளார்.

இது ஒரு கடைக்காரருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்படும் சாதாரண மோதல் தான். இது தமிழகம் முழுவதும் பெரும் பாலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ஜெயமோகன் கடைக்காரர் மனைவியின் மீது மாவு பாக்கெட்டை வீச முயற்சித்ததால் தான் செல்வம் அடிக்க சென்றார் என செல்வத்தின் மனைவி தெரிவித்துள்ளார். அதாவது இரண்டு புறமும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இதில் எழுத்தாளர் ஜெயமோகன் பிரபலமானவர் என்பதால் ஊடகங்கள் வெளிச்சம் அதிகமாக, இந்த விவகாரம் இன்று முழுவதும் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் எழுத்தாளர் என்றோ, ஜெயமோகன் பிரபலமானவர் என்றோ எனக்குத் தெரியவே தெரியாது என அவருடைய பகுதியில் கடை வைத்திருக்கும், அவருடைய வாடிக்கையான கடையின் கடைக்காரர் மனைவி தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தோசை மாவினை ஜெயமோகன் வாங்கும்போது, கடைக்காரர்கள் மனைவி இது நேற்றைய தேதியுடன் முடிவடைந்த மாவு புதிய மாவு இல்லை என்று முன்கூட்டியே தெரிவித்து தான் தோசை மாவை வழங்கியுள்ளார், ஜெயமோகன் தெரிந்து தான் வாங்கி சென்றார் என கடைக்காரர் மனைவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த பிரச்சினையை வேண்டுமென்றே மிகை படுத்தியதாகவும், தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் வாட்டி வதைக்கும் போது, பொறுப்புடன் செயல்பட வேண்டிய, எப்பொழுதும் “வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என பேசும் தலைவர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றுள்ளதால், வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்தி அதிகமாக வெளியே வராதவாறு பார்த்துக் கொள்ள இந்த புளித்த மாவு சம்பவத்தினை, ஊடகங்களில் வெளியிட்டதாக குற்றச்சாட்டானது சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

தாக்கியவர் இயக்கத்தை சார்ந்தவர் என்பதால், இதற்கும் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று தலைவர் பதிலளிப்பாரோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *