பிரவாசி மாநாடு: மலேசியர்களுக்கு டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அழைப்பு! -(VIDEO)

கோலாலம்பூர், டிசம். 06- உலகளாவிய இந்திய வம்சாவளியினருக்கான பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பங்கேற்க விரும்ம்புவோருக்கு மஇகா தேசிய தலைவர் செனட்டர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்தார்.

இந்திய அரசாங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில், கலந்து கொள்ள விரும்புபவர்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். இந்த மாநாடு ஜனவரி 21ஆம் தேதிமுதல் 26ஆம் தேதிவரை இந்து சமயத்திற்கு முக்கியத்தும் வாய்ந்த வாரணாசி நகரில் நடைபெறுகிறது என்று அவர் சொன்னார்.

மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஶ்ரீ மிர்துல் குமார் இன்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரனைச் சந்தித்து பிரவாசி மாநாட்டில் கலந்து கொள்வதற்கான இந்திய அரசாங்கத்தின் அழைப்பை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விக்னேஸ்வரன், அரசியலுக்கு அப்பாற்பட முறையில் அனைத்து தரப்பினரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்று வணக்கம் மலேசியாவுக்கு அளித்த காணொளிப் பேட்டியில் விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

உலக அளவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் இதில் கலந்து கொள்கின்றனர். கல்வி, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பலரும் கூடுவதால் இது நமக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்றார் அவர்.

The post பிரவாசி மாநாடு: மலேசியர்களுக்கு டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அழைப்பு! -(VIDEO) appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *