பிளாஸ்டிக் அரைக்கும் இயந்திரத்தில் விழுந்த மியன்மார் ஆடவர் – மரணம்

ஜோகூர் பாரு, அக். 19 – செனாய் தொழிற்பேட்டையில் அரவை இயந்திரத்தில் விழுந்த 31 வயது மியன்மார் ஆடவர் கொல்லப்பட்டார்.

தொழிற்சாலை கண்காணிப்பாளரின் தகவலுக்குப் பின்னர், அங்கு விரைந்த போலீசார் மரணமடைந்த அந்த ஆடவரின் சடலத்தைக் கண்டதாகவும், அச்சம்பவம் வெள்ளிக்கிழமை காலை 11.30மணியளவில் நடந்ததாகத் தெரியவந்ததாக கூலாய் போலீஸ் தலைவர் ஓசிபிடி தோக் பெங் இயோவ்.

நாயிங் மின் வாய் எனும் அந்த ஆடவருக்கு கழுத்திலும் இடும்பிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அந்தத் தொழிற்சாலையில் அவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததாகவும், இரு மாதங்களுக்கு முன்னர்தான் அவர் சொந்த நாட்டுக்குச் சென்று திரும்பியதாகத் தெரியவந்தது.

சடலத்தின் பிரேத பரிசோதனை கூலாய் மருத்துவமனையில் காலை 10.30 மேற்கொள்ளப்பட்டது. அதில் குற்றச்செயல் எதுவும் நிகழ்ந்ததற்கான தடயம் எதுவும் இல்லை.

The post பிளாஸ்டிக் அரைக்கும் இயந்திரத்தில் விழுந்த மியன்மார் ஆடவர் – மரணம் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *