புதிய பகாங் சுல்தானாக ஜன.15-இல் துங்கு அப்துல்லா பதவியேற்பு!

கோலாலம்பூர், ஜன.12- பகாங் மாநிலத்தின் 6 ஆவது சுல்தானாக பகாங் ரீஜெண்ட் துங்கு அப்துல்லா அரியணையில் அமர்வார் என்று அம்மாநிலத்தின் அரச மன்றம் இன்று அறிவித்தது.

ஜனவரி 15ஆம் தேதியன்று துங்கு அப்துல்லாவின் முடிசூட்டு விழா, பெக்கானிலுள்ள இஸ்தானா அபு பக்காரில் நடைபெறும் என்று அரண்மனை அறிக்கை தெரிவித்தது.

நேற்று நடந்த அரச மன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பகாங் சுல்தானாக துங்கு அப்துல்லா பொறுப்பேற்கும் பட்சத்தில்யாவர் நாட்டின் 16 மாமன்னராக அரியணை அமரும் சாத்தியம் உள்ளது.

மாமன்னருக்கான அரச தேர்வு வரிசைப்படி அடுத்த மாமன்னராக பொறுப்பேற்க வேண்டியவர் பகாங் சுல்தான் ஆவார். இந்நிலையில் தற்போது பகாங் சுல்தான் அகமட் ஷா உடல்நலம் குன்றி இருப்பதால் புதிய சுல்தானாக துங்கு அப்துல்லா பொறுப்பேறகவுள்ளார்.

The post புதிய பகாங் சுல்தானாக ஜன.15-இல் துங்கு அப்துல்லா பதவியேற்பு! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *