புரோ கபடி லீக் தொடர் – பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

7வது புரோ கபடி லீக் தொடரில் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி:

7-வது புரோ கபடி லீக் போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து நாளை அரையிறுதிக்கான பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. 

இந்நிலையில், இந்த போட்டியில் வாகை சூடும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-வது, 4-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.90 லட்சமும், 5-வது, 6-வது இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.45 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மேலும், தனிநபர் சிறப்பு பரிசுகளும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *