பெண்ணின் தொண்டைக்குள் உயிருடன் 2 அங்குல அட்டை! -(video)

Please log in or register to like posts.
News

ஹனோய், ஜன.14- வியாட்நாமில் பெண் ஒருவரது தொண்டைக்குள் இருந்து 2 அங்குல நீளம் கொண்ட அட்டை உயிருடன் எடுக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வலைத்தள வாசிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பல வாரங்களாக கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், மருத்துவமனைக்குச் சென்றார். ‘ஸ்கேன்’ செய்து பார்த்ததில் அவரது தொண்டைப் பகுதிக்குள் அட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கருவியை வாய் பகுதிக்குள் விட்டு உயிருடன் அட்டையை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

அறுவைச் சிகிச்சை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்தப் பெண் கடந்த 3 மாதங்களாக ஊற்று நீரில் குளித்த காரணத்தால் அட்டை அவரது தொண்டைக்குள் சென்று சென்று வளர்ந்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

 

The post பெண்ணின் தொண்டைக்குள் உயிருடன் 2 அங்குல அட்டை! -(video) appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *