பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம்: எச்சரிக்கும் வட கொரியா

Please log in or register to like posts.
News

அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினால், அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தாங்கள் கலந்துகொள்ளும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரியா கூறியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் டிரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்பு ஜூன் 12-ம் தேதி நடக்க உள்ளது.

தனது அணு ஆயுத திட்டங்களை கைவிட தயாராக உள்ளதாக வட கொரியா கூறிய பிறகு, இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு ஏற்பட்டது.

அமெரிக்கா ஒருதலைபட்சமாக எங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்தால், அமெரிக்கா- வட கொரியா பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டபோதிலும், இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் கீ-க்வான் கூறியதாக வட கொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதால் கோபமடைந்த வட கொரிய, தென் கொரியாவுடன் இன்று(புதன்கிழமை) நடக்க இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.

இந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும், படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வட கொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கூறியுள்ளது.

”தென் கொரியவுடன் இணைந்து ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடும் நிலையில், வட கொரியா-அமெரிக்க இடையில் நடக்க உள்ள பேச்சுவார்த்தையின் தலைவிதியை பற்றி அமெரிக்கா கவனமாக விவாதிக்க வேண்டும்” என கேசிஎன்ஏ கூறியுள்ளது.

_101584110_gettyimages-886810466  பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம்: அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா 101584110 gettyimages 886810466

டிரம்ப்- கிம் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்துவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தை குறித்து வட கொரியாவின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது தங்களுக்கு தெரியாது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

வடகொரியாவின் தொனி மாறுவது எதனால்?

தனது அணு வல்லமையை கட்டமைக்க வட கொரியா கடந்த பல ஆண்டுகளாக ஏராளமாக செலவு செய்துள்ளது.

இது டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் அழுத்தம் தரும் முயற்சிகளுக்கு கிடைக்கும் பலனாகவே வடகொரியா பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக சித்தரிக்கப்படுவதையும், இந்த சந்திப்பு டிரம்ப்க்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் வட கொரிய தரப்பு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

கிம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது தங்கள் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றிதான் என்று டிரம்ப் தரப்பு தற்பெருமையுடன் பேசி வருவது வடகொரியாவுக்கு எரிச்சலூட்டியுள்ளது.

தங்கள் பலத்துடன் இருக்கும் நிலையில்தான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளோம் என்று வடகொரியா இந்த உலகுக்கு உணர்த்த விரும்புகிறது.

தங்களுக்கு இசைவான பேரம் முடியாவிட்டால், சிங்கப்பூரில் நடைபெறவுள்ள கிம்-டிரம்ப் சந்திப்பிலிருந்து வெளியேறுவதற்கான அறிகுறியாகவே இந்த எச்சரிக்கை பார்க்கப்படுகிறது.

_101586778_0f5a5922-ba6e-491d-b182-4a9fd701a1c0  பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம்: அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா 101586778 0f5a5922 ba6e 491d b182 4a9fd701a1c0

எது குறித்த பேச்சுவார்த்தை ரத்தானது?

கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வட கொரிய மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையே நடந்த வரலாற்றுப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, புதன்கிழமை நடக்க இருந்த சிறிய அளவிலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரு நாட்டு தலைவர்கள் ஒப்புக்கொண்ட விஷயங்கள் குறித்து, வட கொரிய மற்றும் தென் கொரிய நாட்டு பிரதிநிதிகளும் மேலும் விவாதிக்க இருந்தனர்.

அணு ஆயுதங்களைக் கைவிடுவது, இரு நாடுகள் இடையிலான விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவது, சீனா, அமெரிக்கா இடையே இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவற்றை விவாதிக்க இருந்தனர்.

வட கொரியா ஏன் கோபமடைந்தது?

அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சிகள் வட கொரியாவை அடிக்கடி கோபப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், 100 போர் விமானங்கள், எண்ணிக்கை குறிப்பிடப்படாத பி-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எஃப்-15கே ரக ஜெட் ஆகியவற்றுடன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவும் இணைந்து இந்த சமீபத்திய ராணுவ பயிற்சியினை நடத்தியது.

இந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும்,படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வட கொரியா கூறியுள்ளது.

_101584112_gettyimages-885253752  பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம்: அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா 101584112 gettyimages 885253752

1953ல் அமெரிக்கா மற்றும் தென் கொரியா கையெழுத்திட்ட ஒரு பரஸ்பர பாதுகாப்பு உடன்பாட்டின் அடிப்படையில், இந்த பயிற்சிகள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே என இரு நாடுகளும் அழுத்தமாகக் கூறியுள்ளன.

ஆனாலும் புதன்கிழமை தென் கொரியாவுடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை வட கொரியா ரத்து செய்துள்ளது. இதன்மூலம், அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *