பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா – ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்க இருக்கிறார்கள். #PettaAudioLaunch #Rajinikanth #VijaySethupathi

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. வரும் பொங்கல் தினத்தன்று இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை இந்தப் படத்தின் 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பேட்ட படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் ரஜினியின் அறிமுக காட்சியான மரண மாஸ் பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்த பாடல் ஊலலலா இன்று மாலை இணையத்தில் வெளியாக இருக்கிறது.

பேட்ட படத்தின் முழு பாடல்கள் வெளியீடு வருகிற 9-ந் தேதி (ஞாயிறு) அன்று தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. விழாவில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இதை படக்குழு அறிவிக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சி நடக்க இருக்கும் தனியார் கல்லூரி தரப்பில் இருந்து இது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #PettaAudioLaunch #Rajinikanth #VijaySethupathi

Related Tags :

 பேட்ட பற்றிய செய்திகள் இதுவரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *