பேரங்காடி மின் படிக்கட்டில் விரல்கள் சிக்கியதால் தவித்த சிறுவன்!

பிந்துலூ, ஜூன்.20 – சமீப காலமாக, சில பேரங்காடிகளின் மின் படிக்கட்டுகளின் இடுக்கில் சிறுவர்களின் கால், கால் விரல்கள் மாட்டிக் கொள்வது என்பது வாடிக்கையாகி விட்டது.

அதே போல், பிந்துலூ, சரவாக்கில் உள்ள பேரங்காடி ஒன்றில், 2 வயதிலிருந்து 3 வயதுவரை உட்பட்ட சிறுவன் ஒருவனின் இரண்டு கை விரல்கள், இயந்திர படிக்கட்டுகளின் இடுக்கில் மாட்டிக் கொண்டு அவதிக்குள்ளான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

அதில், பலர் அச்சிறுவனின் விரல்களை வெளியே எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அச்சிறுவனின் விரல்களிலிருந்து இரத்தம் கசிந்தது தான் மிச்சம். பின்னர்  ஊழியர்களின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டான்.

இச்சம்பவம் தொடர்பாக, வலைத்தளவாசிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில் பலர் பெற்றோர்களின் கவனக் குறைவினால் மட்டுமே இவ்வாறு சம்பவங்கள் ஏற்படுகின்றன என்று விமர்சித்துள்ளனர்.

The post பேரங்காடி மின் படிக்கட்டில் விரல்கள் சிக்கியதால் தவித்த சிறுவன்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *