ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் சர்ஃபேஸ் கோ

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் கோ லேப்டாப் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #Microsoft #laptop

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் கோ லேப்டாப் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் புதிய சர்ஃபேஸ் கோ துவக்க விலை ரூ.38,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ லேப்டாப் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் சார்ந்து இயங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விலை குறைந்த லேப்டாப் ஆகும். இன்டெல் பிராசஸர், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ மாடலில் 10.0 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே மற்றும் 500 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஐபேட் போன்றே புதிய சர்ஃபேஸ் கோ மாடலிலும் சர்ஃபேஸ் கோ மைக்ரோசாஃப்ட் இன் சர்ஃபேஸ் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த டேப்லெட் அல்லது நோட்புக் சாதனம் 7-ம் தலைமுறை கோல்டு பிராசஸர் 4415Y, ஃபேன்-லெஸ் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குவதோடு 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஃபிளாஷ் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

கனெக்டிவிட்டியை பொருத்த வரை 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சர்ஃபேஸ் கோ நோட்புக் மாடலில் கீபேட் மற்றும் டிராக்கர் பயன்களை வழங்கும் கேஸ் வழங்கப்படுகிறது.

Related Tags :

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *