ப்ளிப்கார்ட் விற்பனை – இந்த ஆண்டு அசத்திய ஸ்மார்ட்போன் பிராண்டுகள்

Please log in or register to like posts.
News

ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் தலைசிறந்த மொபைல் போன் பிராண்டு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. #Flipkart #smartphone

2018 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தைக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. பல்வேறு பிராண்டுகள் தங்களது சாதனங்களில் புதுவித அம்சங்களை அறிமுகம் செய்து ஆண்டு முழுக்க பல்வேறு டிரெண்ட்களை உருவாக்கின. எனினும் இவற்றில் பயனர் விரும்பும் சாதனங்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் அம்சங்கள், அதன் வடிவமைப்பு என பல்வேறு காரணங்களை கடந்து அதனை எத்தனை பேர் வாங்கி பயன்படுத்துகின்றனர் என்பதே ஸ்மார்ட்போன் மற்றும் அதனை உருவாக்கும் பிராண்டுகளின் வெற்றியாக கருதப்படுகிறது. அந்த வகையில் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள், அதிக பிரபலமாக இருந்த பிராண்டு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள்

2018 ஆம் ஆண்டு ப்ளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்டாக சியோமி இருந்தது. எனினும் சியோமியை தொடர்ந்து பல்வேறு பிராண்டுகளும் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளன. அந்த வரிசையில் சியோமிக்கு அடுத்த இடத்தில் ரியல்மி, ஹானர் மற்றும் அசுஸ் போன்ற பிராண்டுகள் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளன.

தனிப்பட்ட ஸ்மார்ட்போன்களாக பார்க்கும் போது ரியல்மி 2 ஸ்மார்ட்போன் இருபது லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி இருக்கின்றன. இதேபோன்று அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் பத்து லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. பிரபல ஸ்மார்ட்போன்கள் என்ற அடிப்படையில் ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி 5ஏ மற்றும் ஹானர் 9 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் முன்னணி இடங்களில் உள்ளன.

ப்ளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 2, ரெட்மி நோட் 5 ப்ரோ, அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மற்றும் ஹானர் 9 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையான பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களாக இருந்துள்ளன. மேலும் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் அதிகம் விற்பனையான விலை குறைந்த ஸ்மார்ட்போன் மாடலாக சியோமியின் ரெட்மி 5ஏ, ரெட்மி 6 மற்றும் ரியல்மி சி1 உள்ளிட்டவை இருக்கின்றன.

பண்டிகை காலத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள்

2018 ஆம் ஆண்டு பண்டிகை காலத்தில் சியோமி மற்றும் ரியல்மி உள்ளிட்டவை அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் பிராண்டுகளாக இருந்துள்ளன. பண்டிகை காலத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 5 ப்ரோ, ரியல்மி 2, ரெட்மி 6, ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரெட்மி 5ஏ உள்ளிட்டவை இடம்பிடித்துள்ளன.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *