மகனை காண சிங்கை வந்த தாய்: நடை பாதையில் வற்றல்! பாசத்திற்கு எது எல்லை!

சென்னை, ஜன14- சிங்கப்பூரில் மகனைப் பார்க்க சென்ற தாய் ஒருவர், பிளாட்பாரத்தில் மிளகாய் வத்தலை காய வைத்து அதற்கு காவலாக பக்கத்திலேயே படுத்து தூங்கிய காட்சி மனதை நெகிழ வைப்பதாக அமைந்தது.

முன்பெல்லாம் வீட்டில் பெண்களுக்கு மிளகாய் அரைப்பது என்பதே பெரிய வேலை. இதற்காக மிளகாய், தனியா,மஞ்சள் பொருட்களை வாங்கி சுத்தப்படுத்துவர்.
பிறகு அதை வெளியில் காய வைத்து எடுத்து அதனை வாணலியில் வாட்டி எடுத்து அதனுடன் சில பொருட்களையும் வாசனைக்காக வறுத்து எடுப்பர்.

கடைசியில் அதற்கென இருக்கும் ஒவ்வொரு டப்பாக்களில் அதனை போட்டு மாவு மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்து வந்து அதனை ஒரு பேப்பரில் சூடு போக காய வைத்து அதே டப்பாக்களில் 6 மாதம் தாங்குவது போல அரைத்து எடுத்தெடுத்து எடுத்து வைத்து கொள்வர்.

இதனை தன் மகன், மகள்களுக்கு பிரித்து தரும் போது பெற்ற தாயின் சந்தோஷம் யாராலும் உணர முடியாது. ஆனால் ஒரு தாய் சிங்கப்பூரில் இருக்கும் தன்னுடைய மகனை பார்க்க சென்றிருக்கிறார்.

அப்போது பிளாட்பாரத்தில் மிளகாய், மல்லி, மஞ்சள் ஒவ்வொன்றாக காயவைத்து அதற்கு பக்கத்திலேயே காவலுக்கும் உட்கார்ந்திருந்தார் வெயில் காரணமாக களைப்பான, அவர் பேப்பர் ஒன்றினை தரையில் விரித்து கொஞ்ச நேரத்தில் அப்படியே படுத்து தூங்கியும் விட்டார்.

இதனை போட்டோ எடுத்து தனா என்பவர் தனது பேஸ்புக்கில் போட்டு தன் கருத்தையும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூருக்கு அம்மாவை அழைத்து வந்திருக்கிறார். இங்குள்ள விதிமுறைகள்- சட்ட திட்டங்கள் பற்றி கூறாமல் உள்ளார் போல.

பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கித் திண்ணும் வலைத்தல வாசிகளுக்கு. வயலில் விளைந்ததை பிள்ளைகளுக்காக பொட்டலம் கட்டி விமானத்தில் கொண்டு வந்து அதை வெயிலில் உலர்த்தும் தாயின் பாசம் கணினி உலக நண்பர்களுக்கு புரியாது. இந்த பதிவிற்கு ஏராளமானோர் தங்களின் மனம் நெகிழ்ந்ததை குபதிவு செய்துள்ள்னர்.

The post மகனை காண சிங்கை வந்த தாய்: நடை பாதையில் வற்றல்! பாசத்திற்கு எது எல்லை! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *