மகளின் கழுத்தை ஏன் அறுத்தேன்? பதறவைக்கும் வாக்குமூலம்

இன்று யாழ்ப்பாணம் இருபாலையில் பெரியதகப்பனாரால் இளம்பெண்ணொருவர் துடிதுடிக்க கழுத்தறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்த நிலையில் அவரது சகோதரனும் வயிற்றில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூர சம்பவத்தில், இருபாலையை சேர்ந்த பாலசிங்கம் பரிதா (30) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

கொலை செய்த பெரிய தகப்பன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு சொந்தமான காணியை அவர்கள் அபகரித்த மனவிரக்தியில் இந்த கொலையை செய்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன் தனக்கு சொந்தமான காணியை தம்பி குடும்பம் ஏமாற்றி அபகரித்ததாகவும், இதனால் என் குடும்பத்திற்குள் பிரச்சனை பெரிதாகி, மனைவி, பிள்ளைகள் பிரிந்து போய் விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரவல் காணி ஒன்றில் சிறிய குடிசையமைத்து தான் வாழ்ந்து வருவதாகவும், இதன் காரணமாக மிகுந்த மனவிரக்தியுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது காணியை அபகரித்ததுமல்லாமல், தம்பியின் பிள்ளைகள் என்னை கேலி செய்வது எல்லைமீறி சென்றதால், கடைசியில் பொறுமையிழந்து அவர்களை கொலையை செய்ததாக குறித்த சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *