மஞ்சள் மேலாடை போராளிகள் மூட்டிய தீயில் சிக்கிய தாய்-குழந்தை!

பிரான்சில் மஞ்சள் மேலாடை போராளிகள் மூட்டிய தீயில் சிக்கிய தாய் மற்றும் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சோம்ப்ஸ்-எலிசேக்கு அருகே உள்ள Boulevard Roosevelt பகுதியில் நேற்றைய தினம் நடந்த மஞ்சள் மேலாடை போராட்டத்தின்போது, போராளிகள் தீயை மூட்டினர்.

அப்போது இரண்டாவது தளத்தில் இருந்த இளம் பெண்ணும், அவரது குழந்தையும் தீயில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தீயில் சிக்கிய தாய் மற்றும் குழந்தை இருவரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் இச்சம்பவத்தில் 11 பேர் காயமடைந்ததாகவும், அவற்றில் இருவர் பொலிசார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் Christophe Castaner தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அத்துடன் தீ விபத்தை ஏற்படுத்தியவர்களை கொலையாளிகள் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *