மதுபான விடுதியில் நுழைந்து துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்.! 13 பேர் பலி.!

மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அமெரிக்காவில் அடிக்கடி நடந்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு மாணவர்கள் உள்பட ஏராளமானோர் உயிரிழந்திருக்கிறன்றனர். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடந்தன.

இதனால் புளோரிடாவில் மாணவர்கள் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தி புதிய சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் இருக்கும் ஒரு மதுபான விடுதியில் நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு உண்டானது.

உள்ளூர் நேரப்படி நேற்று இரவு தவுசண்ட் ஓக்ஸ் நகரில் இருக்கும் பார்டர்லைன் பாரில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. பாருக்குள் புகுந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சுமார் 30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் பலர் பலத்த படுகாயம் அடைந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளிவந்தது.

மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மதுபான விடுதியை சுற்றி வளைத்தனர். அங்கு துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் துப்பாக்கியால் சூடு நடத்திய மர்ம நபர் உள்பட 13 பேர் பலியாகினர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *