மனித உரிமை தினக் கொண்டாட்டத்தை ஒத்தி வைக்கவும்!- போலீஸ் சுஹாக்காமிற்கு பரிந்துரை

Please log in or register to like posts.
News

கோலாலம்பூர்,டிச.07- நாளை நடக்கவிருக்கும் மனித உரிமை தினக் கொண்டாட்டத்தை ஒத்தி வைக்குமாறு போலீஸ் சுஹாக்கம் எனப்படும் மனித உரிமை ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் துன் மகாதீர் சிறப்பு பிரமுகராக கலந்து கொள்ளவிருக்கும் அந்நிகழ்ச்சி நாளை பெட்டாலிங் ஜெயா, பாடாங் தீமோரில் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

ஆக, அந்நிகழ்ச்சியை ஒத்தி வைப்பதா இல்லையா என்பது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் தெரிய வரும் என்று கூறப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியை ஒத்தி வைக்கும் வாய்ப்பே அதிகமுள்ளதாகவும் தெரிகிறது.

இதனிடையே, சுஹாக்காமின் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனுமதியை போலீஸ் மீட்டுக் கொண்டதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

நாளை கோலாலம்பூரில் ஐசெர்ட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணியும் நடக்கவிருப்பதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரணிக்கு கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கானோர் திரளக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மனித உரிமை தினக் கொண்டாட்டத்தை ஒத்தி வைக்கவும்!- போலீஸ் சுஹாக்காமிற்கு பரிந்துரை appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *