கோலாலம்பூர்,டிச.07- நாளை நடக்கவிருந்த சுஹாக்காம் என்கிற மனித உரிமை ஆணையத்தின் ஏற்பாட்டிலான மனித உரிமை தினக் கொண்டாட்டத்தை ரத்து செய்யப்பட்டுள்ளதை ஹாக்காம் எனப்படும் தேசிய மனித உரிமை அமைப்பின் முன்னாள் தலைவரும் சமூக ஆர்வலருமான டத்தோ அம்பிகா ஶ்ரீனிவாசன் கண்டித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“மீண்டும் பகடி செய்வோரிடம் நாம் தோற்றுப் போயிருக்கிறோம்” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வோராண்டும் நடக்கும் இந்த மனித உரிமை தினக் கொண்டாட்டத்தை நெருக்குதல்களுக்கு கட்டுப்பட்டு அரசாங்கம் நாளை நடக்கவிடாமல் செய்திருப்பது வருத்தமளிப்பதாக சுஹாக்காமின் தலைவர் ரஸாலி இஸ்மாயிலே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொண்டாட்டம் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவிருந்தது. ஆனால், நாளை ஐசெர்ட் பேரணி நடக்கவிருப்பதால் இந்த மனித உரிமை தினக் கொண்டாட்டத்தை வேறொரு நாளில் ஒத்தி வைக்குமாறு போலீஸ் கேட்டுக்கொண்டது.
அதையடுத்து, மனித உரிமை தினக் கொண்டாட்டம் நாளை நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.
The post மனித உரிமை பேரணி ரத்து: மீண்டும் தோற்கடிக்கப் பட்டுள்ளோம்!- அம்பிகா appeared first on Vanakkam Malaysia.