மனைவிக்கு இன்ப அதிர்ச்சி! இப்படி ஆகிவிட்டதே!

பிரான்சில் கேஸ் லீக்கின் காரணமாக ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் நான்கு பேர் இறந்துவிட்டதாக கூறப்படும், நிலையில் அதில் இறந்த பெண் ஒருவரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் பேக்கரி ஒன்றில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து காரணமாக 4 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்து ஒரு நிலநடுக்கத்தைப் போன்று இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்த விபத்தின் காரணமாக ஸ்பெயினைச் சேர்ந்த பெண் ஒருவர் இறந்துவிட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது அவரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகி, அவர் தொடர்பான தகவல்களையும் உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் இந்த வெடிவிபத்தில் சிக்கி இறந்தவரின் பெயர் Laura Sanz Nombela. 38 வயதான இவருக்கு பத்து வயது, ஐந்து வயது மற்றும் மூன்று வயது என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Laura Sanz Nombela தன்னுடைய மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு, கணவர் Luis Migue-வுடன் முதன் முறையாக பிரான்ஸ் தலைநகருக்கு ரோமாண்டிக் டின்னருக்காக வந்துள்ளார்.

சம்பவம் நடந்த பேக்கரிக்கு அருகில் இருக்கும் ஹோட்டலில் தான் இருவரும் இருந்துள்ளனர்.

இது குறித்து Laura Sanz Nombela-ன் தந்தை கூறுகையில், என்னுடைய மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் முதல்முறையாக பாரிசிற்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு இப்படி நடந்துவிட்டதே என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக 50 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *