மனைவி செய்த தவறால் காவல் நிலையத்தில் குழந்தைகளுடன் சரணடைந்த கணவன்!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தவறான உறவில் இருந்த மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் கட்டிடம் கட்டும் தொழில் செய்து வருகிறார்.

இவரது மனைவி கஸ்தூரிக்கும் கணவரின் சகோதரரான சின்னசாமி என்பவருக்கும் இடையே தவறான உறவு இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் கணவன் மனைவிக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், நேற்றிரவும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர்.

அதிகாலையில் ஆத்திரம் தீராத கோவிந்தராஜ் வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார்.

இதையடுத்து இரு ஆண் குழந்தைகளுடன் காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் தான் தவறு செய்ததாக சரண் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *