மனைவி, பிள்ளையின் தலைகள்: வீட்டின் கூரையில் கண்டெடுக்கப்பட்டன

மலாக்கா, அக். 13 – மனைவியையும் அவரது மகனையும் கொன்று, சடலங்களைத் துண்டாக்கி வீசிய சிங்கப்பூர்காரன், வீட்டின் கூரையில் வீசப்பட்ட அவ்விருவரின் தலைகளை அடையாளம் காட்டினான்.

இருவரின் சடலங்கள் புதருக்கு அருகில் வீசப்பட்டதை வியாழக்கிழமை புல் வெட்டும் ஊழியர் கண்டு, போலீசுக்குப் புகார் அளித்தார்.

27 வயது பெண் மற்றும் அவரின் 11 வயது மகனின் சடலங்களின் சில பாகங்கள் அங்கு கிடந்தன. ஆனால், தலையும் கைப் பாகங்களும் அங்கு கிடைக்கவில்லை. அந்தச் சடலங்கள் 4 நாள்களுக்கு மேல் அங்கு கிடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

சிங்கப்பூர் போலீசாரின் உதவியோடு அந்த 31 வயது நபர் கைது செய்யப்பட்டான். குடும்பத்தாருடன் சண்டை போட்ட பின்னர், மனைவியையும் அவரின் முதல் திருமணத்தில் பிறந்த ஒரு மகனையும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான். சடலங்களைத் துண்டு துண்டாக்கிய பின்னர், கைகளை வீட்டில் இருந்த குப்பைத் தொட்டியில் வீசி விட்டு,மற்ற உடல் பாகங்களை இரு வெவ்வேறு இடங்களில் வீசியிருக்கிறான்.

பிரேதங்களின் உடல் பாகங்களை வீச காரில் சென்றபோது, அந்தப் பெண்ணின் இளைய மகனையும் தன்னோடு கூட்டிச் சென்றுள்ளான். அக்டோபர் 18 வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரணை தொடர்கிறது.

The post மனைவி, பிள்ளையின் தலைகள்: வீட்டின் கூரையில் கண்டெடுக்கப்பட்டன appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *