மன்னிப்பு கேட்ட இளவரசி மெர்க்கலின் தந்தை!

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் 52 வயது சகோதரர் தனது காதலியுடன் பயணம் செய்கையில் போதையில் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தற்போது வெளி உலகத்துக்கு தெரியவந்ததையடுத்து மன்னிப்பு கோரியுள்ளார்.

52 வயதான தாமஸ் தனது 38 வயது காதலியுடன் குடித்து வாகனம் ஓட்டியுள்ளார். சாலையில் செல்கையில் எதிரே வந்த வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சோதனையில், ரத்தத்தில் 0.11% அளவு ஆல்கஹால் கலந்துள்ளது தெரியவந்தது. காதலர்கள் இருவரும் மது விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு வந்துள்ளனர்.

பின்னர், வீட்டுக்கு செல்கையில் போதையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்ததாக தாமஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தாமஸ் தனது கால்வலிக்கு மருந்து எடுத்துக்கொண்ட காரணத்தால் அவரால் முழுமையான சோதனைக்கு ஒத்துழைக்க முடியவில்லை.

தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது தந்தை தாமஸ் மெர்க்கல் மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு வருகையில் பார்ப்பரசிகளின் கண்ணில் சிக்கி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கு பிறகு தாந் இந்த சம்பவம் வெளியில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, இப்படி ஒரு சம்பவம் நடந்தது அவமானமாக இருக்கிறுது, இதனால் எனது மகளுக்கும் கெட்டப்பெயர், எனவே அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என தந்தை தாமஸ் மெர்க்கல் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *