மன அழுத்தத்தில் இருக்கும் நடிகை

தமிழில் இரண்டு, மூன்று படங்களில் நடித்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக ஒல்லி நடிகர் வலம் வந்தாராம்.

தமிழில் இரண்டு, மூன்று படங்களில் நடித்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக ஒல்லி நடிகர் வலம் வந்தாராம். சமீபத்தில் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார் என்றும், விரைவில் சினிமாவுக்கு முழுக்க போடப்போகிறார் என்றும் செய்திகள் பரவியதாம். இதனால் நடிகை கடும் ஆத்திரம் அடைந்துள்ளாராம்.

இந்த வதந்திகள் ஆதாரமற்றவை. எதிலும் உண்மை இல்லை. எனக்கு திருமணம் ஆகவில்லை, நான் கர்ப்பமாகவும் இல்லை. என்னை அடையாளம் காட்டிய சினிமாவை விட்டு நான் எப்படி போவேன்? 20 வயதில் நடிக்க வந்தேன், இப்போது எனக்கு 32 வயதாகிறது என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

இதுபோன்ற தொடர் புரளிகள் எனக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகின்றது என்று பலரிடமும் கூறி வருகிறாராம்.

Related Tags :

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *