மரணத்தை எதிர்கொள்ளும் சூரியன்: படிகமாக மாறி வருகின்றதா?

Become metalலண்டன், ஜன.12- மரணிக்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூரியன், படிகமாக மாறி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். சூரியனுக்கும் ஆயுட்காலம் உண்டு என ஏற்கனவே விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

இந்நிலையில் பூமிக்கு சொந்தமான சூரியனும் படிப்படியாக இறப்படைந்து வருவதாகவும் இதனால் திடp பளிங்கு நிலைக்கு மாறி வருவதாகவும் தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்து தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது தனது ‘கையா’ செயற்கைகோளின் உதவியுடன் இதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளது

அந்த செயற்கைக் கோள் மூலம் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு அமெரிக்கா, கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

மிகப் பெரிய வெள்ளை நிறத்தில் சிறுத்துவரும் நட்சத்திரங்கள் தங்களது ஆயுள் காலம் முடியும் போது திடமான உலோக படிகங்களாக மாறும் என்பதற்கான ஆதாரங்கள் இவை என்று ஆய்வாளர்கள் வர்ணித்தனர்.

மரணத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் படிகமாகுகின்றன அல்லது திரவத்திலிருந்து திடப்பொருளாக மாறுகின்றன. இதுவே முதல் நேரடி ஆதாரமாகும் என வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் பையர் இமானுவேல் ட்ரபம்ப்லே தெரிவித்துள்ளார்.

The post மரணத்தை எதிர்கொள்ளும் சூரியன்: படிகமாக மாறி வருகின்றதா? appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *