மலாய்க்காரர்கள் ஒருவரை ஒருவர் அவமதிப்பதா? சுல்தான் நஸ்ரின்

மலாக்கா,டிச.07- நாட்டில, மலாய் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் முகத்தில் கரியைப் பூசிக் கொள்ளும் களத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாக துணைப் பேரரசர் சுல்தான் நஸ்ரின் ஷா கூறியுள்ளார். ஆனால், இது ஒட்டுமொத்த மலாய் இனத்திற்கே அவமானம் என்பதை அவர்கள் உணரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய அரசியல் கலாசாரம் இனவெறியைத் தூண்டியுள்ளது. அது, அவரவரது விசுவாசத்திற்குரிய கட்சி, அமைப்பு ஆகியவற்றின் சுயநலத்திற்கு மட்டும் முக்கியத்துவத்தை வழங்குபவர்களாக மலாய்க்காரர்களை மாற்றி விட்டது. ஆனால், தாங்கள் அனைவருமே மலாய் முஸ்லிம் சமூகம் என்பதை அவர்கள் மறந்து விட்டதாக சுல்தான் நஸ்ரின் ஷா சுட்டிக் காட்டினார்.

இவ்வாறு மலாய் முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே சகோதரத்துவ பண்பு மறைந்துவரும் நிலையில் அச்சமூகம் மெல்ல பலவீனம் கண்டு வருவதாகவும், இத்தகைய பண்பு எல்லா வகையிலும் மலாய் சமூகத்தை பின்னடைவு காண வழி வகுக்கும் என அவர் நினைவுறுத்தினார்.

“இஸ்லாம், ஒழுக்கம், நம்பகத்தன்மை, நேர்மை, விசுவாசம் என உயர்ந்த பண்புநலன்களைக் கொண்௶அ மலாய் சமூகத்தை உருவாக்கி இருந்தது. ஆனால் அதை தாங்களாகவே மலாய்க்காரர்கள் சீர்குலைத்து வருகிறார்கள்” என்றார் அவர்.

மலாக்கா, பண்டார் ஹிலிரில் நடந்த இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சுல்தான் நஸ்ரின் தற்போதைய மலாய் சமூகத்தின் நிலை குறித்து இவ்வாறு பேசினார்.

The post மலாய்க்காரர்கள் ஒருவரை ஒருவர் அவமதிப்பதா? சுல்தான் நஸ்ரின் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *