மலேசியாவில் ஷாகிர் நாய்க், உரை நிகழ்த்த தடையில்லை! – அமைச்சர்

கோலாலம்பூர், ஜன.12-சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கும் சமயப் போதகரான டாக்டர் ஷாகிர் நாய்க்கின் உரைக்கு எதிராக மலேசியாவின் புதிய அரசாங்கம் தடை எதனையும் விதிக்கவில்லை என்று பிரதமர் துறை அமைச்சரான முஜாஹிட் யூசோப் ராவா தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி முறைகளைக் கடை பிடிக்கும் பட்சத்தில் சமயப் போதகர்கள் எவருக்கும் அத்தகைய தடை இருக்காது என்று அவர் விளக்கினார்.

வழிகாட்டி விதிகளைப் பின்பற்றுவார்களேயானால், அது ஷாகிர் நாய்க்காக இருந்தாலும் சரி, இதர போதகர்களாக இருந்தாலும் சரி, எந்தப் பிரச்னை இருக்காது என்ற அடிப்படையில் பெரும்போக்காக கொள்கையை அரசாங்கம் கடைபிடிக்கிறது என்றார் அவர்.

பொதுவாக சமயப் போதகர்கள் உரையாற்றுவதற்கான அனுமதியைப் பெறவேண்டும் என்ற விதிமுறையும் அந்த வழிகாட்டி முறையில் உண்டு.

இஸ்லாமிய சமுதாயத்தின் மத்தியிலோ அல்லது மலேசியாவில் பொதுவான நிலையிலோ, அத்தகையோரின் கருத்துக்கள் சர்ச்சைகளை உருவாக்குவதாக புகார்கள் வராத நிலையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று முஜாஹிட் யூசோப் ராவா தெரிவித்தார்.

 

T

The post மலேசியாவில் ஷாகிர் நாய்க், உரை நிகழ்த்த தடையில்லை! – அமைச்சர் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *