மலேசிய பிளாஸ்டிக் கழிவுகள்: திரும்பப் பெற கனடா தயார்!

டொரோண்டோ, ஜூன்.18- கனடாவிலிருந்து மலேசியாவிற்கு அனுப்பப்பட்டதாக நம்பப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மீண்டும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக அந்நாட்டு அரசாங்கம் மலேசியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எனினும், கனடாவிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் மொத்த அளவு எவ்வளவு என்பது இதுவரை தெரியவில்லை.

கனடா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் உட்பட 14 நாடுகளில் இருந்து மலேசியாவுக்கு 3,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்று மலேசிய அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

கனடாவில் இருந்து வந்ததாக நம்பப்படும் அந்த பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து மலேசிய அரசாங்கத்துடன் கனடிய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

அவற்றை மீட்டு கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கனடிய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்தை துறை அறிவித்து இருக்கிறது.

அண்மைக் காலமாக வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் பிரச்சனை தென்கிழக்காசிய நாடுகளில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. பல்வேறு நாடுகளுடனான உறவுகளை இது பாதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மலேசிய பிளாஸ்டிக் கழிவுகள்: திரும்பப் பெற கனடா தயார்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *