மாணவர்களுக்கு கார் கதவை திறந்துவிடும் பள்ளிப் பாதுகாவலர்! (VIDEO)

Please log in or register to like posts.
News

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.10- மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளின் முன் சாலைப் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக பாதுகாவலர் ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பார். பள்ளி தொடங்கும்போதும் முடியும்போதும் மாணவர்கள் சாலையைக் கடக்கும் சமயத்தில் அந்த பாதுகாவலர் அவ்வழியே வரும் வாகனங்களை கண்காணிப்பதைத்தான் நாம் வழக்கமாக பார்த்திருப்போம். ஆனால், பள்ளிக்கு காரில் வந்திறங்கும் மாணவர்களுக்கும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்களுக்கும் கார் கதவைத் திறந்துவிடும் பாதுகாவலரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்படியொரு பாதுகாவலரை பாண்டார் பாரு பாங்கியில் உள்ள ஜாலான் 4 தேசியப்பள்ளியில் நீங்கள் பார்க்கலாம்.

#Video Source : Youtube

சாலைப் போக்குவரத்தையும் கண்காணித்துக் கொண்டு, ஓடி ஓடி மாணவர்களுக்கு கார் கதவையும் திறந்துவிடும் அந்த பாதுகாவலரின் தொழில் பக்தி வியக்க வைக்கிறது. அவர் இன்முகத்துடன் கார் கதவை திறந்துவிடும் போதெல்லாம் மாணவர்கள் அவருக்கு சலாம் கூறிவிட்டுச் செல்கிறார்கள்.

இப்படியும் ஒரு பாதுகாவலரா என்று ஆச்சரியத்தில், ‘Az-Zahrah Multi-Intelligence Academy (AMPAC)’ எனப்படும் அமைப்பு அப்பாதுகாவலரை வீடியோ எடுத்து அதனை பேஸ்புக்கில் நேற்று பதிவேற்றம் செய்து வைரலாக்கியுள்ளது.

இப்படி எல்லா பள்ளிகளிலும் ஒரு பாதுகாவலர் இருந்துவிட்டால் மாணவர்களும் பாதுகாப்பாக பள்ளிக்குச் சென்று வருவார்கள். பெற்றொர்களும் தைரியமாக இருப்பார்கள் என சம்பந்தப்பட்ட பாதுகாவலரை அதிகமானோர் பாராட்டி வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *