மான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி

மொனாக்கோவில் நடைபெற்ற மான்ட்கார்லோ டென்னிசின் இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சை வீழ்த்தி இத்தாலி வீரர் பாபியோ போக்னினி கோப்பையை கைப்பற்றினார். #MonteCarlo #Fognini

மான்ட்கார்லோ:

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் போக்னினியும், செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சும் மோதினர்.

தொடக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடிய போக்னினி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் கோப்பையை இத்தாலி வீரர் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. #MonteCarlo #Fognini

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *