மிகச்சிறிய தங்க மீனுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை – நலமுடன் வீடு திரும்பியது

லண்டன், செப்19- சுமார் ஒரு கிராம் எடைக் கொண்ட தங்க மீன் ஒன்றிற்கு அறுவை சிக்கிச்சையின் மூலம் அதன் வயிற்றிலிருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

மோலி என்ற பெயருடைய அந்த தங்க மீனின் வயிற்றில் கட்டி இருப்பதை அறிந்த அதன் உரிமையாளர் உடனே மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளார்.
அதன் வயிற்றில் இருப்பது கட்டிதான் என்பதை உறுதிப்படுத்திய கால்நடை மருத்துவர்கள் சுஅந்தக் கட்டியை வெளியெடுக்க சுமார் 40 நிமிடங்கல் எடுத்துக் கொண்டனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த தங்க மீன் நலமுடன் இருப்பதாகவும் மாலையிலே வீடு திரும்பிலாம் என்றும் கூறப்பட்டது.
உலகிலேயே மிகவும் சிறிய விலங்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது இதுவே முதன்முறை என்றும் இதற்கு முன் பாம்பு மற்றும் இகூவானா போன்ற விலங்குகளுக்கே அறுவை சிகிச்சையினை மேற்கொண்டிருக்கிறோம் என்று மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர்

The post மிகச்சிறிய தங்க மீனுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை – நலமுடன் வீடு திரும்பியது appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *